கனவு கண்டேன்

கனவு கண்டேன் பகலினிலே
கண்கள் இரண்டையும் திறந்துவைத்தே
நினைவு திரும்ப மறுக்குதடி
உன்னை நினைத்ததால் சிக்கலடி..

ஊனம் அது ஊனமல்ல‌
ஊன்று கோலாய் இதயம் இருக்கு
கானம் பாட மனதும் இருக்கு
கலக்கம் எதுக்கு மானிடமே

வாழத்தானே வாழ்க்கை இருக்கு
அழுக எதுக்கு நேரம் இங்கே
காலம் மாறும் கவலை தீரும்
மேள தாளம் உன்னைச் சேரும்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Nov-17, 3:47 pm)
Tanglish : kanavu KANDEN
பார்வை : 89

மேலே