விடியலை விரும்பும் விழிகள --- மணியன்

விடியலை விரும்பும் விழிகள். . .
இருளின் தடங்களில்
இட்ட சுவடுகளை காண
விடியலை தேடும் விழிகள் . . . .
நாதக் குழலில்
நாபியின் இருளில்
நயம்பட வரும் இசை மறந்து
விடியல் தேடுது விழிகள் . . .
இரவின் படிக்கட்டுகளில்
இச்சை தீர நடனமிட்டு
இன்னுமொரு இருள் வேண்டி
விடியல் தேடுது விழிகள் . . . .
விடிந்தபின் எழுந்து
வீணாக உழன்று
வெந்து கடந்து
வேதனை தீர்க்கும்
இருளைப் பிரிந்து
விடியலை தேடுது விழிகள் . . . .
நீ தூங்கினாலும்
விடியல் உறங்காது. . .
பறவைகள் உனக்கு
விடியலை உணர்த்தும் . . .
இன்றைய விடியலில்
எதனைத் தொலைத்தாய் . .
எதனைப் பெற்றாய் . . .
எதனை அளித்தாய். . .
இருளில் தேடிட தினமும் ஏங்குகிறாய். . .
விழிகளில் விடியலை மீண்டும் தேடுகிறாய். . .
விடியலின் ஜனனம்
இருளின் மரணம்
ஜனனமும் மரணமும்
இயற்கையின் நியதி . . .
நீ அசைவதும்
நீ ஆடுவதும்
நீ தினம் தேடுவதும்
நினைப்பது நடவாது வாடுவதும்
நிம்மதி தொலைத்து
நீள் துயர் கொள்வதும்
இருளின் சாபமா. .
இல்லை விடியலின் வரமா. . .
நேற்று விடிந்தது
இன்று விடிகிறது
நாளையும் விடியும். . .
விடியலுக்காக ஏங்கிடும் நீ
விடிந்தபின் கிழிக்கப் போவது என்ன. . .
எந்திர விலங்கு நீ
என்ன சாதித்தாய். . .
ஓடுவதும் தேடுவதும்
தேடியது கிட்டினும்
தேற்றாமல் வாடுவதும்
தேவை அறியாமல்
தெரு சுற்றிதானே நீ . . . .
போதும் என்ற சொல்லை
ஒருபோதும் அறிந்ததுண்டா.
வாடுகின்ற ஏழையின்
வயிறைப் பார்த்ததுண்டா. .
காகம் போல் கரைந்து
கிடைத்ததைப் பகிர்ந்ததுண்டா. .
விடியலின் அர்த்தம்
விடியலில் இல்லை. . .
விடியலின் உன்னதம் உன்
விழிகளில்தான் உண்டு.
விழிகளை விரித்து
உலகத்தைப் பார் . .
இருளுக்கும் ஒளி உண்டு
உன் இதயத்தில் இருந்து . . . .
விடியலைத் தேடிடும் எந்திரா
உன்
முடியலை அறிந்து திருந்துடா . . . . . .
* = * = * = *