குழந்தை தொழிலாளர்

குழந்தையை கொடுத்தவன்
குடி போதையில்
வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு
உழைக்கும் முதல் குழந்தை
வயிற்றை தடவி தடவி கேட்கிறான்
புண்பட்ட கைகளுடன்
வயிற்றில் இருக்கும் தங்கை
பசியாறிவிட்டதா என்று
ஆராவில்லை என்றால்
இன்னும் ஐந்து மணி நேரம்
அதிகமாக உழைக்கலாம் என்று

எழுதியவர் : அழகேந்திரன் (23-Apr-16, 12:58 am)
பார்வை : 69

மேலே