போதைக்கடிமை
![](https://eluthu.com/images/loading.gif)
அன்னையின் அமிழ்தன்புக்கு அடிமையாகும் வேலையிலே
குடிகெடுக்கும் குடிக்கு அடிமையான தேனோ
ஒளிமிகு வாழ்கை இயற்கையோடு இன்பம்தருகையிலே
இருள் மிகு நரகத்தில் அடைவதேனோ
கல்வியின் இயல்பால் புகழ்ச்சி அடைகையிலே
கடலில்கார்மேகம் கரைந்ததுபோல் இகழ்ச்சியில் மாய்வதேனோ
வெண்நில ஒளிபோல் வாழ்வு சுடர்விடுகையிலே
கரியவிடத்தில் உடல் மாசடை வதேனோ
மனைவி மக்களென உழைப்போடு இருக்கையிலே
துன்பம்தரும் பாழ் கிணற்றிலடைவ தேனோ
பொன்மாலையில் பூவாசத்தில் புவி பூத்துகுளுங்கையிலே
துன்பம்தரும் துர்வாசத்தில் அடைவ தேனோ
சமுதாயத்தில் செல்வந்தனாய் செழித் துயர்கையில்
நோய்நொடியில் நொந்து மாய்வ தேனோ
உற்றாருடன் கைகோர்த்து நிமிர்ந்து நிற்கையிலே
உடன்வந்தோரின் உடல்வருத்தி தலைகுனிவ தேனோ
அவனியில் ஆழ்துயரின்றி அழியாநட்பு கொள்கையிலே
மதுவுக்கடிமையாகி உடனிருப்பவரை அழிப்ப தேனோ?