முத்தொள்ளாயிரம் - சேரன் 10 -இன்னிசை வெண்பா

முத்தொள்ளாயிரம்
சேரன்
இன்னிசை வெண்பா

இவனென் நலங்கவர்ந்த கள்வன் இவனெனது
நெஞ்சம் நிறையழித்த கள்வனென்(று) - அஞ்சொலாய்
செல்லும் நெறியெலாம் சேரலர்கோக் கோதைக்குச்
சொல்லும் பழியோ பெரிது! 10

பொருளுரை

இவன் என் அழகைக் கவர்ந்துகொண்ட கள்வன்,

இவன் என் நிறைநெஞ்சைக் குறைநெஞ்சு ஆக்கிய கள்வன்- என்று சேரலர் கோக்கோதை செல்லும் இடமெல்லாம் அவனைப் பழி தூற்றுகிறார்களே!

“நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை” – கலித்தொகை 133 காதலை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அடக்கி வைத்திருந்தேன். என் காதலைப் பிறர் அறியும்படிக் காட்டச் செய்த கள்வன் இவன் – என்கிறாள்!

எழுதியவர் : பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை (2-Jul-25, 9:38 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே