இயேசு மதுவை எதிர்த்தாரா 3 3
௩/௩ - இயேசு மதுவை எதிர்த்தாரா ‘
—
யாதுமறியான்.
—
இயேசு கிறித்து மது அருந்தியதாக பைபிளில் எங்கும் குறிப்பிடப்படவில்லை .
ஆனால் திராட்சை ரசத்தை அவர் பருகி இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. கானாவூர் திருமணத்தின் போதும் சரி, அவரது இரவு உணவின் போதும் சரி, திராட்சை ரசத்தை பிறர் உண்பதற்கு அவர் பகிர்ந்து அளித்துள்ளார் .
மேலும், யூதர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது இயேசு
" எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ "அவன் பேய்பிடித்தவன்" என்கிறார்கள்.
( மத்தேயு 11:18 )
மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, "இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்" என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று."( மத்தேயு 11:19 ) என்கிறார் . அவரைப் பற்றி அக்கால யூத மக்களின் கணிப்பு இதுவே.
பழைய ஏற்பாட்டிலும் சில நூல்களிலும் மது அருந்துவதைக் கண்டித்தாலும் , திராட்சை ரசமோ அல்லது மதுவோ அருந்துவதற்குத் தந்தையாகிய கடவுள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை .
மாறாக திராட்சை ரசம் மது அருந்துவதைப் பற்றி
கடவுளின் கட்டளையை பாருங்கள் .
" தம்பெயர் விளங்கும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்துகொண்ட இடத்தில், உன் தானியங்களிலும், உன் திராட்சை இரசத்திலும், எண்ணெயிலும் பத்திலொரு பாகத்தையும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றுக்களையும் அவரது திருமுன் உண்பாய். அதனால் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு என்றும் அஞ்சி நடக்கக் கற்றுக் கொள்வாய்.
கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசியளிக்கும் போது, அவர் தம் பெயர் விளங்கும்படி தேர்ந்து கொண்ட இடம் உனக்கு வெகு தொலையில் இருந்தால், நெடும் பயணம் செய்யவேண்டியதாயும், உன் பொருள்களைத் தூக்கிச் செல்ல முடியாததாயும் இருந்தால்,
நீ அதை விற்று, பணத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்திற்குச் செல்.
அங்கே உன் விருப்பம் போல் மாடு, ஆடு, திராட்சை இரசம், அல்லது மது ஆகியவற்றையும் உன் நெஞ்சம் விரும்பும் எதையும் அந்தப் பணத்திற்கு வாங்கி, நீயும் உன் வீட்டாரும் உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் உண்டு மகிழ்வீர்களாக! "
( இணைச் சட்டம் 14: 23-26)
எனவே, தந்தையாகிய கடவுளே மது அருந்துவதற்கு அனுமதி அளிக்கும் போது யூத முறைமையின்படி வாழ்ந்த இயேசு கிறித்து, மது அருந்தி இருப்பார் என்றே கருத வேண்டி உள்ளது.
மேலும் பைபிளில் திராட்சை இரசம் மற்றும் மது ஆகியன சமமானவைகளாகவே பாவிக்கப் படுகின்றன. தந்தையாகிய கடவுள் கூறுகிறார்.
" இஸ்ரயேல் மக்களிடம் சொல்; ஓர் ஆணோ பெண்ணோ தன்னை ஆண்டவருக்குத் தனிப்படுத்திச் சிறப்பான பொருத்தனையான நாசீர் பொருத்தனை செய்து ஆண்டவருக்குத் தன்னை அர்ப்பணித்தால்,
திராட்சை இரசம், மது ஆகியவற்றை அவன் விலக்க வேண்டும்; திராட்சை இரசம், மது ஆகியவற்றின் காடியை அருந்தக் கூடாது. திராட்சைப்பழச் சாற்றைக் குடிக்கக் கூடாது. திராட்சைப் பழங்களையோ, வற்றலையோ உண்ணவும் கூடாது.
பொருத்தனைக் காலம் முழுதும் திராட்சைக் கொடியிலிருந்து கிடைக்கும் எதையும், விதைகள், தோல்களைக் கூட, அவன் உண்ணக்கூடாது. "
( எண்ணிக்கை 6: 2 - 4 )
இங்கே, திராட்சைக் கொடியில் இருந்து கிடைக்கும் எதனையும் உண்ணக்கூடாது என்பது கவனிக்கத்தக்கது. எனவே திராட்சை இரசமும் மெதுவாகவே கருதப்பட்டார் என்பது தெளிவு.
இத்தகு சூழ்நிலையில், திருவள்ளுவர் கள்ளுண்ணாமை - மது அருந்தாமையை வலியுறுத்துவது, மது அருந்துவதைஎதிர்க்காத , இயேசு கிறித்துவின் கோட்பாடுகளுக்கு முற்றிலும் புறம்பாகவே உள்ளது .

