காகிதக் கனவு ---- மணியள்
என்னுயிர்த் தோழர்களே
என்னை அழுக்காங்குகளேன் . . . .
முழுமனதோடு கூவுகிறேன்
முகவரி தாருங்களேன் . . . .
வெண்மையில் தவிக்கிறேன்
வேறு நிறமிடுங்களேன் . . . .
குதித்தோடும் தமிழ் பிடித்து
குமிழ் நிறைய மையேந்துங்களேன் . . .
தமிழ் கொண்டு நீங்கள்
ததும்பத் ததும்ப கவி புனையுங்களேன் . . . .
காதல் கடிதங்கள் வரைந்து
காணாப் பிணமாய் கிழித்தெறியுங்களேன் . . . .
கல்லாவை நிரப்பலாம்
காசாக அச்சேற்றுங்களேன் . . . .
சதுர வடிவம் தந்து என்னைச்
செவ்வானம் எங்கும் பறக்க விடுங்களேன் . . . .
மனதின் குறைகளை மறவாமல் பட்டியலிட
தினசரி குறிப்பாக்கி தலையணை அடி வையுங்களேன் . . . .
தலைவன் படம் வெளிவரும் போது
தும்பு தும்பாய் என்னைக் கிழித்தெரியுங்களேன் . . . .
இருந்தாலும் நான் பிறப்பதற்கும்
இயற்கையோடு கலப்பதற்க்கும். . . .
இன்று மட்டும் நீங்களொரு
மரக்கன்று ஒன்று நடவுங்களேன் . . . .
மரமிருந்தால்தான் நான் உண்டாம்
மனமிருந்தால்தான் இவை உண்டாம். . . . .
வேரு இன்றி நான் தவிக்கலாமா. . .
வேறு வார்தை இருந்தாலும் சொல்லுங்களேன். . . .
நன்றியுடன் நான் தலையாட்டுகிறேன்
இப்படிக்கு --- மரம்