சிறப்போ இழிவோ
கரைதலென்றால் காகம்,
குரைத்தல் என்றால் நாய்
வஞ்சமென்றால் நரி,
மாசென்றால் பன்றி !
பேச்சென்றால் கிளி ,
பாட்டென்றால் குயில் ,
அழகென்றால் மயில் ,
அமைதி என்றால் புறா!
உழைப்பென்றால் மாடு ,
சுமை தூக்கி என்றால் கழுதை ,
சுறுசுறுப்பென்றால் எறும்பு,
படபடப்பென்றால் ஈசல் !
உவமைகள் பல,
உவமேயம் ஒன்றே!
பன்மையாம் உயிர்கள் இயல்பு ,
ஒருமையாம் மனித நடத்தைக்காய் !!!