ஏதோ ஓர் எழுதுகோல்

வடிக்க எழுதுகோலை பிடித்தேன்
வழிந்தது வியர்வை
நனைந்தது காகிதம்
முடிந்தது கவிதை

*****

எழுதுகோலின் அழகு நடையில்
என் நடை வீழ்ந்தது

*****

எதுவும் எழுதவில்லை
வெள்ளையாய்
இருக்கிறது
காகிதம்

*****

யாருக்கும்
பஞ்சமில்லை
காகிதம் பாய் விரிக்க
மை தோய்த்து
யாவரும்
துயிலலாம்
கனவாய்
நனவாய்
#எழுதுகோல்

*****

பென்சிலை
பென்சிலும்
தாங்குமா
இல்லை
சிலுவை ஆகுமா

*****

எவன் எவனோ
எழுதி விட்டு போனான்
என்னால் தான்
எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை

*****

நான் என்ன
பாவம் செய்தேன்
பெயர் தான்
நீதிபதி

உன் கையில்
கிடைத்ததனால் தானோ
எனக்கு இந்த நிலை

*****

மொழி தெரியா
மேதை அவள்
எனை வைத்து காவியம் படைத்தாள்
ஓவியம் தீட்டினாள்
வீட்டுச் சுவற்றில்

வெள்ளையடிக்க வேண்டாம்
எவனோ எழுதுகிறேன்
எனும் பெயரில் கிறுக்கும் பொழுது
கிறுக்கலில் எனை கிறங்க
செய்தவள் இவளே


*****

தத்தித் தத்தி நடை பழகும்
தங்க மேனி இவள்
ஐம்பொன் சிலை இவள்

ஒரு நாள் கூட நான்
கண்டதில்லை
இவள் அடித்தலை


ஊர் ஊரா போனாலும்
உலகத்தார் சொன்னாலும்
என் மரணம்
உன் கையில்
ஓ ஹோ
என் மரணம்
உன் கையில்

நிர்வாணமாக்கினாய்
நான் வேதனை படவில்லை
காரணம் நீ


நீ மேதாவி ஆக
நான் மரித்து போவேன்

உயிர் கொடுக்கிறேன்
என்னுயிரை கொடுத்து
நாதா

ஏதோ சொல்ல வந்து
ஏதோ சொல்லி முடிக்கிறேன்
உயிரே

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (18-Jul-16, 7:51 pm)
Tanglish : yetho or ezhuthukol
பார்வை : 134

மேலே