mahakrish - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : mahakrish |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 30-Aug-2011 |
பார்த்தவர்கள் | : 264 |
புள்ளி | : 126 |
ஓட்டமாய் ஓடும் காலத்தில் வாட்டம் -
ஓய்வில்லையே என்று,
ஓய்வு பெற்ற பின்பும் வாட்டம் -
வேலை இல்லையே என்று!
காசில்லா காலத்தில் கவலை -
காபி குடிக்கக் கூட காசில்லையே என்று,
காசு கொட்டிக் கிடக்கும் போதும் கவலை
காபியில் சர்க்கரை போட முடியவில்லையே என்று!
உற்ற நண்பனுடன் வாயாடுகையில் வருத்தம்-
சற்றே வாழ்வில் சாதிக்கவில்லையே என்று,
மற்றோரெல்லாம் சாதனையாளன் என்ற போதும் வருத்தம்-
சாதனையின் அர்த்தமே கேள்விக்குறி ஆனதால்!
வேடிக்கை மனம்,
வினோத மனம்,
நிலையில்லா மனம்,
இவ்வளவு தான் மனம்-
மனிதவாழ்வை போலே!
கடலென மேகம் ,
கவியென நானும் ,
இயல்புகளை பெரிதுபடுத்த !
கவியின் மய்யம் அவனே ,
கற்பனையின் பயணமும் அவனுடனே !
நினைவுகள் எல்லாம் இனிக்க -வெறும்
காதலர்கள் இல்லை நாங்கள் !
உணர்வுகளில் அறுசுவை! காரணம் -
கணவன் மனைவியாய் நாங்களும் !
ஊடலில் இனிப்பு ,
சாடலில் கசப்பு !
தேடலில் உவர்ப்பு -அது
மிகையாதலில் கார்ப்பு !
வழக்கத்தில் சலிப்பு ,
சலிப்பில் புளிப்பு !
வார்த்தைகளின் வசப்படா -
சிற்சில உணர்வுகளில் துவர்ப்பு !
அறுசுவைகளின் அங்கம் அவன் ,
அலையாடும் உணர்வுகளை -
இசையவைக்கும் நிபுணன் அவன் !
மேகம் மழைதனை பொழிய,
மனம் நினைவுகளை பொழிய-நானும்
எனை மறந்து
இந்திய விடுதலைக்குப் பின் ஐதராபாத் நிஜாம் சமஸ்தானம் இந்தியாவுடன் இணையும் வரை உள்ள சூழலில் நிகழும் அரசியல், சமூக மாற்றங்களை சிறு கல்லூரி செல்லும் சிறுவன், சந்திரசேகரன்- அவன் குடும்பம், நண்பர்களின் சூழல், அவன் சந்திக்கும் மாற்றங்கள், அவன் மன குழப்பங்கள் வாயிலாக சித்தரிக்கின்றது இந்நாவல்.
நெறிகள் கட்டுப்பாடுகள் எல்லாம் சமூகம் சுமூகமாய் செல்லும் வரையிலேயே! அரசியல் மாற்றங்களினால் ஏற்படும் சமூக அதிர்வலைகள், பாதிப்படையும் மனிதப்போக்குகள், முதிர்ச்சி அற்ற மனிதர்களினால் விழையும் ஆபத்துக்கள், அதிலும் தன் கை ஓங்கும் போது தொத்திக்கொள்ளும் ராட்சச குணம் , தாழ்ந்ததும் முரணாய் பற்றிக்கொள்ளும் அடக்கம்.. அதற
நிலவின் வெளிச்சத்தில்
நித்திரையின்றி தவிக்கிறேன்,
உலவும் மனதே -கொஞ்சம்
உறங்கவும் மாட்டாயோ!
கடந்த காலம் கடந்தாகி விட்டது ,
எதிர் காலம் என்ன வென்று அறியாய்,
எதற்கிந்த ஊசலாட்டம் - எதற்கும்
உதவா எண்ண ஓட்டம்!
இருப்பதை மறந்து,
இல்லாததற்கு ஏங்கும்,
மடமையின் உச்சமடி நீ!
மூளையை மயக்கும் மாயையடி நீ !
சராசரியை சகிக்க முடியாமல்
சதா புதுமை வேண்டுபவள்.
என்னுள் உய்க்கும் ராட்சசியடி நீ !
உன்னை ஏய்க்கும் வழியும் உண்டோ ?
நிலவொளியில்,
இரவின் இசைவில்,
நான் காண்பது ..
நதி நீரின் ஓட்டமா?
இல்லை என்
எண்ணங்களின் ஓட்டமா ?!
அங்கங்கே மின்னும் ஓட்டம்,
இருள் கலந்த ஓட்டம்!
நிசப்தத்தின் ஒலியில்-
எனக்கு மட்டுமே கேட்கும் கானம்!
எண்ணங்கள் கவி வரிகளாய்,
மனம் இசை அமைக்க,
உணர்வுகள் இசைக்கருவிகளாய்-
பாடகன் யாரோ நானறியேன்!
வித்தியாசமாய் யோசிக்கிறேன்,
விரும்பியவற்றை செய்கிறேன்,
வஞ்சமொன்றும் இல்லை என்னிடம்,
வேதனை ஒன்றும் தருவதில்லை எவருக்கும்-இருந்தும்
என்னை விளிப்பது என்னவோ -'கிறுக்கன்'!
வெறுமையில் திருப்தி,
வைப்பே கொடுப்பினை
விதி வழி,
வேஷமின்றி வாழும்,
நானோ கிறுக்கன் !
எஞ்சியவற்றை தருகிறீர்கள்,
எதிர்பார்ப்பென்று எதுவும் இல்லை,
நச்ச்சுகள் நிறைந்த நல்லவர்கள் மத்தியில்,
நானோ கிறுக்கன் !
பணத்தாசை கண்ணை மறைக்க,
குணத்தை புதைங்குழியில் புதைத்து விட்ட,
புண்ணியவான்கள் மத்தியில்,
நானோ கிறுக்கன் !
தன்னிலை அறியாமல்,
சுயமரியாதை கெட்டு,
பெண்ணினம் தனது பலவீனம் என ,
பல்லிளிப்போர் மத்தியில்-
நான
வகை வகையாய் முகங்கள் ,
விரும்பி மாற்றுகிறோம் முகங்கள்!
வேலை நடக்க ஒன்று -நல்ல,
வேளை எதிர்பார்த்து மற்றறொன்று !
வீட்டில் ஒன்று - அதுவும் ,
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்று !
நாம் வாடிக்கையாளர் என்றால் ஒன்று -
நமது வாடிக்கையாளர் என்றால் மற்றறொன்று !
பாத சாரி என்றால் ஒன்று -
வாகன ஓட்டி என்றால் மற்றறொன்று !
மகள் என்றால் ஒன்று-
மருமகள் என்றால் மற்றறொன்று !
வேண்டியவர் என்றால் ஒன்று -
விரோதி என்றால் மற்றறொன்று !
மேலானவர் என்றால் ஒன்று -
இளைத்தவர் என்றால் மற்றறொன்று !
வகை வகையாய் முகங்கள்,
விரும்பி மாற்றுகிறோம் முகங்கள்-இதில்
பட்சபாதம் பற்றிய பேச்சும் நமக்கெதற்கு !
உழைப்பின் எச்சம் சாதனை.
பிழைப்பின் பாட்டிற்கு ஒரு படி ஏற்றம் -சாதனை.
இளைப்பாற வெறுத்ததால் சாதனை,
விழைந்து வருந்தியதால் சாதனை !
சாதனையாளர் பிரபலங்களா?-இல்லை,
பிரபலங்கள் சாதனையாளர்களா ?
சமூகம் போற்றுவது பிரபலங்களையா-இல்லை,
சாதனையாளர்களையா ?
கலை விளையாட்டு மட்டுமா சாதனை களம்?
நிழல் ஊடகம் மட்டுமா கணிக்கும் தராசு?
நிதம் அன்றாடத்திலும் உண்டே சாதனை,
அசல் சுய நிர்ணயமும் ஆகாதோ?!
உழைப்பின் எச்சம் சாதனை.
பிழைப்பின் பாட்டிற்கு ஒரு படி ஏற்றம் -சாதனை.
இளைப்பாற வெறுத்ததால் சாதனை,
விழைந்து வருந்தியதால் சாதனை !
சாதனையாளர் பிரபலங்களா?-இல்லை,
பிரபலங்கள் சாதனையாளர்களா ?
சமூகம் போற்றுவது பிரபலங்களையா-இல்லை,
சாதனையாளர்களையா ?
கலை விளையாட்டு மட்டுமா சாதனை களம்?
நிழல் ஊடகம் மட்டுமா கணிக்கும் தராசு?
நிதம் அன்றாடத்திலும் உண்டே சாதனை,
அசல் சுய நிர்ணயமும் ஆகாதோ?!
வித்தியாசமாய் யோசிக்கிறேன்,
விரும்பியவற்றை செய்கிறேன்,
வஞ்சமொன்றும் இல்லை என்னிடம்,
வேதனை ஒன்றும் தருவதில்லை எவருக்கும்-இருந்தும்
என்னை விளிப்பது என்னவோ -'கிறுக்கன்'!
வெறுமையில் திருப்தி,
வைப்பே கொடுப்பினை
விதி வழி,
வேஷமின்றி வாழும்,
நானோ கிறுக்கன் !
எஞ்சியவற்றை தருகிறீர்கள்,
எதிர்பார்ப்பென்று எதுவும் இல்லை,
நச்ச்சுகள் நிறைந்த நல்லவர்கள் மத்தியில்,
நானோ கிறுக்கன் !
பணத்தாசை கண்ணை மறைக்க,
குணத்தை புதைங்குழியில் புதைத்து விட்ட,
புண்ணியவான்கள் மத்தியில்,
நானோ கிறுக்கன் !
தன்னிலை அறியாமல்,
சுயமரியாதை கெட்டு,
பெண்ணினம் தனது பலவீனம் என ,
பல்லிளிப்போர் மத்தியில்-
நான
கரைதலென்றால் காகம்,
குரைத்தல் என்றால் நாய்
வஞ்சமென்றால் நரி,
மாசென்றால் பன்றி !
பேச்சென்றால் கிளி ,
பாட்டென்றால் குயில் ,
அழகென்றால் மயில் ,
அமைதி என்றால் புறா!
உழைப்பென்றால் மாடு ,
சுமை தூக்கி என்றால் கழுதை ,
சுறுசுறுப்பென்றால் எறும்பு,
படபடப்பென்றால் ஈசல் !
உவமைகள் பல,
உவமேயம் ஒன்றே!
பன்மையாம் உயிர்கள் இயல்பு ,
ஒருமையாம் மனித நடத்தைக்காய் !!!
ஓ! பறவையே! அதென்ன, அப்படி ஓர் ஆனந்த கூத்து.
அது சரி! உன்னைப்போல் தான் நானும் கூத்தடிப்பேன்-
என் தலைவனும் அருகில் இருந்தால்!
ஓ! மரக்கிளையே! அதென்ன அப்படி ஓர் அசையா சிலை வடிவு,
அது சரி! உன்னைப்போல் தான் நானும் சிலையாகி இருக்கிறேன்-
காற்றின் குறையால் அல்ல,
கனாக்களின் மிகையால்!
ஓ! எறும்பே! அதென்ன அப்படி ஓர் அவசர ஓட்டம்.
அது சரி! உன்னைப்போல்தான் நானும் ஓடி இருப்பேன்-
உணவுக்காக அல்ல , என் தலைவனுக்காக !
ஓ! அணிலே! அதென்ன அப்படி ஒரு துள்ளல்.
அது சரி! உன்னைப்போல்தான் நானும் துள்ளி இருப்பேன்-
என்னவன் மட்டும் கண்ணெதிரே வந்தால்!
ஓ! முகிலே! அதென்ன அ