நித்திரயில்லா இரவு

நிலவின் வெளிச்சத்தில்
நித்திரையின்றி தவிக்கிறேன்,
உலவும் மனதே -கொஞ்சம்
உறங்கவும் மாட்டாயோ!

கடந்த காலம் கடந்தாகி விட்டது ,
எதிர் காலம் என்ன வென்று அறியாய்,
எதற்கிந்த ஊசலாட்டம் - எதற்கும்
உதவா எண்ண ஓட்டம்!

இருப்பதை மறந்து,
இல்லாததற்கு ஏங்கும்,
மடமையின் உச்சமடி நீ!
மூளையை மயக்கும் மாயையடி நீ !

சராசரியை சகிக்க முடியாமல்
சதா புதுமை வேண்டுபவள்.
என்னுள் உய்க்கும் ராட்சசியடி நீ !
உன்னை ஏய்க்கும் வழியும் உண்டோ ?

எழுதியவர் : மகா !! (8-May-20, 11:13 am)
சேர்த்தது : mahakrish
பார்வை : 254

மேலே