கிறுக்கன்

வித்தியாசமாய் யோசிக்கிறேன்,
விரும்பியவற்றை செய்கிறேன்,
வஞ்சமொன்றும் இல்லை என்னிடம்,
வேதனை ஒன்றும் தருவதில்லை எவருக்கும்-இருந்தும்
என்னை விளிப்பது என்னவோ -'கிறுக்கன்'!

வெறுமையில் திருப்தி,
வைப்பே கொடுப்பினை
விதி வழி,
வேஷமின்றி வாழும்,
நானோ கிறுக்கன் !

எஞ்சியவற்றை தருகிறீர்கள்,
எதிர்பார்ப்பென்று எதுவும் இல்லை,
நச்ச்சுகள் நிறைந்த நல்லவர்கள் மத்தியில்,
நானோ கிறுக்கன் !

பணத்தாசை கண்ணை மறைக்க,
குணத்தை புதைங்குழியில் புதைத்து விட்ட,
புண்ணியவான்கள் மத்தியில்,
நானோ கிறுக்கன் !

தன்னிலை அறியாமல்,
சுயமரியாதை கெட்டு,
பெண்ணினம் தனது பலவீனம் என ,
பல்லிளிப்போர் மத்தியில்-
நானோ கிறுக்கன் !

கட்டுப்பாட்டை தனக்கே வைத்துக்கொள்ள,
கீழ்த்தரமான செயல்களை பின்னால் செய்து,
கண்முன்னே கஜகம்பீரமான கோமாளிகள் மத்தியில் -
நானோ கிறுக்கன் !

தானும் நிம்மதியற்று,
தன்னை சார்ந்தோரின் நிம்மதியும்,
பெரும் வேதனை என பொருமும் விஷமிகளின் மத்தியில்-
நானோ கிறுக்கன் !

எண்ணிலடங்கா மனித வகைகள்,
எண்ணிலடங்கா மனித போக்குகள்,
பெயர்சூட்டப்படாத இவைகளின் மத்தியில்,
நானோ ! வெறும் கிறுக்கனே !!!

எழுதியவர் : மகா!!! (9-Aug-16, 11:37 am)
பார்வை : 110

மேலே