சிதைந்த காதல்
இசையால் இணைந்தன இரு மனங்கள்
பின் காதல் மொட்டாய் மாறி
காதல் பிணைப்பில் மலராய் அலர்ந்து
பார்ப்போரும் வியக்க பரிமளிக்க
அய்யகோ ஜாதி மதப் பேயால்
திடீரெனத் தாக்கப்பட்டு உருக்குலைய
தெரு ஓரத்தில் ரத்த வெள்ளத்தில்
கேட்ப்பார் அற்று கிடக்க
அங்கு தெரு நாய் ஒன்று மட்டும்
ஓல குரலால் ஓலமிட்டிருக்க
இசை சேர்த்த அந்த இரு மனங்கள்
உடலை விட்டு பிரிந்து
வானிலிருந்து இந்த அவலத்தை
நோக்கி ............... கண்ணீர் விட்டன