ஏக்கத்தின் மிகுதியால்

ஓ! பறவையே! அதென்ன, அப்படி ஓர் ஆனந்த கூத்து.
அது சரி! உன்னைப்போல் தான் நானும் கூத்தடிப்பேன்-
என் தலைவனும் அருகில் இருந்தால்!

ஓ! மரக்கிளையே! அதென்ன அப்படி ஓர் அசையா சிலை வடிவு,
அது சரி! உன்னைப்போல் தான் நானும் சிலையாகி இருக்கிறேன்-
காற்றின் குறையால் அல்ல,
கனாக்களின் மிகையால்!

ஓ! எறும்பே! அதென்ன அப்படி ஓர் அவசர ஓட்டம்.
அது சரி! உன்னைப்போல்தான் நானும் ஓடி இருப்பேன்-
உணவுக்காக அல்ல , என் தலைவனுக்காக !

ஓ! அணிலே! அதென்ன அப்படி ஒரு துள்ளல்.
அது சரி! உன்னைப்போல்தான் நானும் துள்ளி இருப்பேன்-
என்னவன் மட்டும் கண்ணெதிரே வந்தால்!

ஓ! முகிலே! அதென்ன அத்தனை முறை உருமாற்றம்.
அது சரி! உன் கணக்கையே நான் மிஞ்சி இருப்பேன்-
என் தலைவனுக்காக முகம் பாவங்கள் மாற்றுவதிலும் தான்!

ஓ! மனமே! அதென்ன இப்படி ஒரு பிதற்றல்,
அது சரி! உன்னை சொல்லி குற்றமில்லை,
ஏக்கத்தின் மிகுதியால் வேறென்ன செய்ய முடியும் உன்னால்!

எழுதியவர் : மகா !!! (12-Dec-15, 8:52 pm)
பார்வை : 100

மேலே