மன்மத காதல்

தடுமாறுதே..
நெஞ்சம் தடுமாறுதே!!
நிலையில்லா நீர்க்குமிழ் போல்,
நித்தம் நித்தம் தடுமாறுதே!

கடலலைக் கூட ஓய்ந்திடக்கூடும்
மனமிது என்று ஓய்ந்திடுமோ?

நாளும் பர்பலப் பெண்கள் கண்டேன்
காதல் என்பது எதுவென சொல்வேன்?
பழகிப் பேசி சிரிப்பதா?
இல்லை ஒன்றாய் நாட்கள் களிப்பதா?

எல்லாம் செய்தும் எனக்குள்ளே..
அப்படி ஒன்றும் தொன்றளையே?

காணும் பெண்கள் கண்களைக்கவர,
உள்ளம் கவர்ந்தவள் காணலையே!

ஒவ்வொரு பெண்ணும் பழகும் போது
இது தான் காதல் என்றே தோன்றும்
பழகியவள் எல்லாம் காதலியானால்,
காதலின் அர்த்தம் இழிவாயப்போகும்!!

கவர்ந்து என்னைக் காதல் செய்ய,
காரியம் ஒன்றும் செய்ததில்லை!
தானாய் அன்பு பெருகி வர,
தாழிட்டுத் தடுப்பது முறைதானோ?
எனவே,
அன்பு காட்டி அரவணைத்தேன்,
கனிவாய்ப் பேசி காதலித்தேன்!

மாறி மாறி காதலிக்க,
காதல் மன்னன் நான் தானோ?
எது தான் காதல் தெரியாமல்,
காதல் செய்தேன் அனைவரயும் !

உண்மை காதல் எதுவென தெரிந்தால்
உடனே சொல்லுங்கள் என்னிடத்தில்..
கற்றுக் கொண்டு காதலிக்க~!!!

எழுதியவர் : நேதாஜி (12-Dec-15, 7:50 pm)
பார்வை : 89

மேலே