நிலவொளியில்
நிலவொளியில்,
இரவின் இசைவில்,
நான் காண்பது ..
நதி நீரின் ஓட்டமா?
இல்லை என்
எண்ணங்களின் ஓட்டமா ?!
அங்கங்கே மின்னும் ஓட்டம்,
இருள் கலந்த ஓட்டம்!
நிசப்தத்தின் ஒலியில்-
எனக்கு மட்டுமே கேட்கும் கானம்!
எண்ணங்கள் கவி வரிகளாய்,
மனம் இசை அமைக்க,
உணர்வுகள் இசைக்கருவிகளாய்-
பாடகன் யாரோ நானறியேன்!

