சாதனையாளர்களும் பிரபலங்களும்

உழைப்பின் எச்சம் சாதனை.
பிழைப்பின் பாட்டிற்கு ஒரு படி ஏற்றம் -சாதனை.
இளைப்பாற வெறுத்ததால் சாதனை,
விழைந்து வருந்தியதால் சாதனை !

சாதனையாளர் பிரபலங்களா?-இல்லை,
பிரபலங்கள் சாதனையாளர்களா ?
சமூகம் போற்றுவது பிரபலங்களையா-இல்லை,
சாதனையாளர்களையா ?

கலை விளையாட்டு மட்டுமா சாதனை களம்?
நிழல் ஊடகம் மட்டுமா கணிக்கும் தராசு?
நிதம் அன்றாடத்திலும் உண்டே சாதனை,
அசல் சுய நிர்ணயமும் ஆகாதோ?!

எழுதியவர் : மகா !!! (18-Jan-18, 10:50 pm)
பார்வை : 130

மேலே