பட்சபாதம்
வகை வகையாய் முகங்கள் ,
விரும்பி மாற்றுகிறோம் முகங்கள்!
வேலை நடக்க ஒன்று -நல்ல,
வேளை எதிர்பார்த்து மற்றறொன்று !
வீட்டில் ஒன்று - அதுவும் ,
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்று !
நாம் வாடிக்கையாளர் என்றால் ஒன்று -
நமது வாடிக்கையாளர் என்றால் மற்றறொன்று !
பாத சாரி என்றால் ஒன்று -
வாகன ஓட்டி என்றால் மற்றறொன்று !
மகள் என்றால் ஒன்று-
மருமகள் என்றால் மற்றறொன்று !
வேண்டியவர் என்றால் ஒன்று -
விரோதி என்றால் மற்றறொன்று !
மேலானவர் என்றால் ஒன்று -
இளைத்தவர் என்றால் மற்றறொன்று !
வகை வகையாய் முகங்கள்,
விரும்பி மாற்றுகிறோம் முகங்கள்-இதில்
பட்சபாதம் பற்றிய பேச்சும் நமக்கெதற்கு !