காகிதமாய் கசங்கித்தான் போனேன் நானும்

காகிதமாய் கசங்கித்தான்
போனேன் நானும்
வெற்று காகிதங்களை
பணமென்றும்
அது இல்லாதவனை
வாழ இயலாதவனென
இச்சமூகமும் அதன் விழுதுகளும்
ஒதுக்கி வைத்த போது

காகிதமாய் கசங்கித்தான்
போனேன் நானும்
தன்னமிக்கை ஒன்றை
மட்டும் மூலதனம்
என்றெண்ணிக்கொண்டிருந்த போது


காகிதமாய் கசங்கித்தான்
போனேன் நானும்
வாழ்வதற்கு
உண்ண உணவும்
உடுக்க உடையும்
படுக்க இடமும்
இருந்தால் மட்டும் போதும்
என்றெண்ணிக்கொண்டிருந்த போது

காகிதமாய் கசங்கித்தான்
போனேன் நானும்
காதலிக்க
நல்ல மனமும்
நல்ல குணமும்
இருந்தால் மட்டும் போதும்
என்றெண்ணிக்கொண்டிருந்த போது

காகிதமாய் கசங்கித்தான்
போனேன் நானும்
தாய் தந்தையை
காப்பதற்கு பாசம் மட்டும்
இருந்தால் போதும்
என்றெண்ணிக்கொண்டிருந்த போது

காகிதமாய் கசங்கித்தான்
போனேன் நானும்
மனிதனாய் பிறந்து விட்டால்
புனிதனாய் வாழ்ந்திடலாம்
என்றெண்ணிய போது!!!

-------தேன் மொழி (சதிஷ்)

எழுதியவர் : தேன் மொழி (21-Nov-16, 2:02 pm)
பார்வை : 101

மேலே