கருப்பு பணம் ஒழிந்திடல் வேண்டும்

நம் நாட்டிற்கு இந்த
பதுங்கி நிற்கும்
கருப்பு பணம்
ஒரு சாபக் கேடே

இதை அடியோடு
வெளி கொணர்ந்து
அழித்தால் தான்
நாட்டின் பொருளாதாரம்
நிலைத்து நிற்கும்

அன்று வெள்ளையன் ஆட்சியில்
சுதந்திரம் அடைந்திட
வெறி கொண்டு எழுந்தோம்
நாட்டிற்காக தியாகங்கள்
பல செய்தோம்
சுதந்திரம் அடைந்தோம்


நாட்டை முன்னேற்ற பாதையில்
கொண்டு செல்ல
அரசாங்கம் செயல்கள் மட்டும் போதாது
குடியரசு மக்களால் மக்களுக்காக
நடத்தப்படும் ஆட்சி
இதை பாமரர் முதல்
மெத்த படித்துவரும்
கருத்தில் கொள்ளல் வேண்டும்


ஊழல்கள் கருப்பு பணம்
இரண்டும் வெளியேற
குடிமக்கள் நாம்
நம் அரசாங்கத்திற்கு
ஒத்துழைப்பு தரவேண்டும்

கருப்பு பண நடமாட்டம்
ஈனர்களுக்கு கொண்டாட்டம்
தீவிர வாதத்தின் வாகனம்

கருப்பு பணம் ஒழிந்திட
அரசாங்க முயற்சியில்
நமக்கு சில
அசௌகரியங்கள் உண்டு
இதை நாம் சில நாள்
பொறுத்துக்கொண்டு
விழிப்போடு இருந்தோம் ஆனால்
கருப்பு பணம் எல்லாம் வெளிவரும்

கள்ளர்கள் எல்லாம்
நாட்டின் துரோகிகள் எல்லாம்
இல்லாமல் போய்விடுவார்
நாடு முன்னேறும்
நாமும் முன்னேறி
பசி பஞ்சம் இன்றி
சுகங்கள் கண்டிடுவோம்
இனிதே வாழ்ந்திடுவோம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Nov-16, 7:20 am)
பார்வை : 95

மேலே