பா ட் டி

பத்து ரூவா காசு
பாவி நான்
பத்திரமா வச்சிருந்தேன் . . .

பாத்தவுக சொல்லுவீரோ
பாவிக்கு
பாத்தவுக சொல்லுவீரோ . . . .

பான்ட்ஸ் பவுடர் டப்பா
பாத்து நானும் ஓட்ட போட்டு
பக்குவமா வச்சுருந்தேன் . . . .

கொஞ்ச நாளாக் காணலியே
அஞ்சு நாளாத் தூங்கலியே . . . .

பரணுலயும் தேடிப்புட்டேன்
போன எடந் தோணலையே . . . .

பேத்தி கேக்கும் பஞ்சுமுட்டாய்
பாவி வாங்கிக் கொடுக்கலையே . . . .

பேரன்கூடக் கேக்கலியே
போடான்னு நான் சொல்லலியே . . . .

தனியாளா இந்த கட்ட
தடுமாறித் தவிக்கிறேனே . . . .

பொட்டு வச்ச மாமனுந்தான்
போனானே காட்டு வழி . . . . .

பெத்தெடுத்த புள்ளைகளும்
பார்க்க இன்னும் கூடலையே . . . . .

போனாப் போகுதுன்னு
புலம்பியழத் தெம்பில்லையே . . . . .

பாத்தவுகச் சொல்லுவீரோ
பத்து ரூவாச் சில்லறையும் . . . . . . . . . .
அன்புடன் பாட்டி

எழுதியவர் : மல்லி மணியன் (8-Jan-17, 7:42 pm)
சேர்த்தது : நெல்லை ஏஎஸ்மணி
பார்வை : 119

மேலே