உண்மையே உன் விலை என்ன
![](https://eluthu.com/images/loading.gif)
#உண்மையே உன் விலை என்ன..?
முழு பூசணிக்காய் சோற்றுக்குள்
என்றதெல்லாம் சங்க காலம்
முழு பூசணிக்காய்
சோற்று பருக்கைக்குள்
நம்பித்தான் ஆக வேண்டும்
கலிகாலத்தில்....!
உண்மையை குப்பிக்குள் அடைத்துவிட்டு
பொய் காற்றில் ஒத்து ஊதல்
ஏகாந்தமாயிருக்கிறது
சாதகமானவர்களுக்கு
இனிக்கத்தான் செய்கிறது
அரசியல் பந்திகளில்..!
நேரத்திற்கேற்ப பசப்பு மொழிகள்
காரியம் நிறைவேற
உண்மையின் கண் கட்டப்படுகிறது
சில நேரங்களில்..!
புதைக்கப்படுகிறது
பல நேரங்களில்..!
சாட்சியமற்றுப்போவதற்கு
விலை நிர்ணயங்கள்
பலவாறான உண்மைகளுக்கு
பட்டியலிட்டு...!
அரிச்சந்திரர்களுக்கு
உண்மையின் விலை
அறிந்து கொள்வது
அவசியமற்றதாகிவிடுகிறது..!
சந்திர அரிகள் மட்டுமே
அறிந்த சிதம்பர ரகசியம்
உண்மையின் விலை யாதென..!
"உண்மையே உன் விலை என்ன??"
கேட்போரேல்லாம் குற்றவாளிகளே..!
-சொ. சாந்தி-
"வாங்க பேசலாம்" குழுமத்திற்காக எழுதியது. தலைப்பினை அளித்த குழுமத்திற்கு என் நன்றிகள்..!