என்ன சொல்ல ஏது சொல்ல

என்ன சொல்ல ஏது சொல்ல

ஓடி ஓடி உழைத்தும்
உலக்கு அரிசி மிஞ்சல
தேடித் தேடிப் பார்த்தும்
வறுமை நீங்க வழியில்லை
ரோட்டோரம் படுத்துறங்கி
இருக்கக் கூரையும் குடிக்கக் கூழும்
இல்லாத எங்க நெலமைய
என்ன சொல்ல ஏது சொல்ல...

நாலெழுத்துப் படிச்சி
கணக்காக காலத்தைக் கழிக்க
கைநிறைய சம்பளம் வாங்கிடத்தான்
நாள் கிழமை பார்த்து
பாடம் படிக்க அனுப்பிவச்ச
பெற்றவர்கள் வயித்துல புளியக் கரைச்சி
காதல் போதையில் மாட்டி
தடுமாறும் இளைய மனம்
திருட்டுக்கல்யாணம் செய்யும் கொடுமையை
என்ன சொல்ல ஏது சொல்ல...

குடும்ப நிலைமைய உறவுகளைப்
பெருசா நினைக்காம
தன்னல நோக்கத்தோடு
மனசுலகஷ்டமுன்னு
தன் உயிரைத் தானே கொன்று
நிம்மதியா உலகத்த விட்டு
போகும் புண்ணியவான்களை
நினைச்சு சிரிக்கவா அழுகவா
ஒண்ணுமே புரியலை
தன்னம்பிக்கையோடு வாழ்ந்து
உறவுகளை மனங்குளிரவைக்கும்
நல்லபண்பு அழியுதோ
என்ன சொல்ல ஏது சொல்ல..

.. நாகினி

எழுதியவர் : நாகினி (9-Sep-14, 2:59 pm)
பார்வை : 76

மேலே