உன் பிரிவை யோசித்தால்

உன் பெயரை
ஒரு முறை வாசித்தால்........
இதழும் இதயமும்
ஒரே நேரத்தில்
தித்திக்கின்றது!
உன் உருவத்தை
ஒரு தரம் நேசித்தால்......
கண்களும்
கவிதைகளும்
ஒரே நேரத்தில்
சிறகடிக்கிறது!
உன் நினைவுகளை
ஒரு தடவை
பூஜித்தால்.......
சொர்க்கமும்
போதையும்
ஒரே நேரத்தில்
பக்கம் வருகிறது
அன்பே!
உன் பிரிவுகளை
ஒரு நாழிகை யோசித்தால்........
துயரத்தின் சோடையும்
மரணத்தின் வாடையும்
ஒரே நேரத்தில்
வந்தடைகிறது.

எழுதியவர் : (9-Sep-14, 2:57 pm)
பார்வை : 89

மேலே