நான் உன்னிடம் கேட்பது - இராஜ்குமார்

நான் உன்னிடம் கேட்பது
=======================

என்னை பாரடி ..!

உனையே ரசிக்கிறேன்
உனையே தேடுகிறேன்

உனையே நினைக்கிறன்
உன் நினைவிலே வாழ்கிறேன்

உனையே எழுதுகிறேன்
நீயின்றியே
உன்னுடன் நடக்கிறேன்
நீயின்றியே
உன்னுடன் பேசுகிறேன்

வராத கவி வரிகளில்
உனையே வைக்கிறேன்
எழுதும் கருத்தின் முடிவில்
உனையே எழுதுகிறேன்

இமைகளை அழுத்தியும்
உனையே காக்கிறேன்
காரணம் கடத்தியும்
உனையே பிடிக்கிறேன்

பெண்ணே
நான் உன்னிடம் கேட்பது ..
..
....
இப்போதும் ஏதுமில்லை
இனியும் ஏதுமில்லை

நீ எப்படியோ
அப்படியே இரு
அது போதும் ......

- இராஜ்குமார்

நாள் ; 4 - 12 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (1-Oct-14, 8:05 am)
பார்வை : 133

மேலே