நான்காம் நிலையில் நான் - இராஜ்குமார்

நான்காம் நிலையில் நான்
========================

எனது பொய்யிலும்
மாறாத மெய்யிலும்
அன்பானவள் நீயடி .!

அடர்ந்த இருளில்
வழிகாட்டும் ஒளியாய்
உந்தன் கரு விழியடி .!

புரியாத மனதில்
புதிதாய் யுத்தம்
அறியாத நிலையில்
தீயாய் நித்தம்
இதற்கான அர்த்தம்
உன் நினைவின் சப்தம்

வருத்தி கொண்டும்
வருடி கொண்டும்
வாடாமல் மலருது
தேனான பல நினைவு

எந்தன் உயிரை
உணர்வுகள் துரத்த
உணர்சிகள் உருத்த

கன்னம் சிவந்து
கண்கள் கலங்கியதும்
வாழ்வின் விளையாட்டாம் ..!

சில விதை விழுவதில்லை
சில விதை முளைப்பதில்லை

சில விதை வளர்வதில்லை
ஒரு சில வளர முடியதில்லை

நான்காம் நிலையில் நான் .!

- இராஜ்குமார்

நாள் : 1 - 12 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (1-Oct-14, 7:41 am)
பார்வை : 121

மேலே