M Kailas - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : M Kailas |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 04-Nov-1953 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 1080 |
புள்ளி | : 186 |
கவிதை படிப்பதும் எழுதுவதும் என் வழக்கம்
பூவுலகில் பிறப்பெடுத்த
உயிர்களுக்கெல்லாம்
தாகம் தணிப்பதற்கு
தண்ணீர் தர வேண்டி
ஆதவன் பொறுப்போடு
ஆணையிட்டான் மேகத்துக்கு
மனிதர்களைப்போல்
மேகம் சும்மா இராமல்
சூரியனிடம் முறையிட்டு
உதவி கோரியது ,
மேலே எழுந்தது கடல் நீர்
மேகம் மற்றதைக் கவணித்தது
மனிதனின் கல்லீரல் போல்
கடல் நீரை சுத்திகரித்து
குடி நீராக்க மேகம் முயற்சித்து
மழை நீராய் பொழிந்தது
மண்ணில் வாழ் உயிர்களின்
தாகம் தணிந்தது
மேகத்தை போல
மக்களின் துயரை போக்கி
மனம் மகிழச் செய்து
அடுத்தவருக்கு உதவினால்
அவர்களும் தெய்வம் தான்
இல்லாத ஏழைகளுக்கு
பாதை மாறி பாதியிலே
தொலைவதற்கு,
போதை தேடி வீதியிலே
அலைகின்றான்.
சாராயம் வாய் நுழைந்து,
சரம்சரமாய் வயிறிரங்கி,
செங்குருதி ஊடாய் நீந்திப்
போகும்.
செந்நிறப் பாதையில்
நங்கூரமிட்டு,
சிறிது சிறிதாய் நஞ்சு
பாய்ச்சும்.
பயணித்த நஞ்சின் வீரியத்தில்,
பஞ்சான கல்லீரல் கல்லாகும்.
கழிவகற்றும் உறுப்புகளை
களையெடுத்து,
கடைசி நாளைக் கல்லறையில்
குறித்து வைக்கும்.
மங்கையரும் மதுவருந்தி, இந்த
மண்ணின் நியதி மீறுகின்றார்.
காரிகை பருகும் தீங்கான மதுவாலே,
கருவான விதை நெல்லும் பழுதாகும்.
பண்பாடு, கலாச்சாரம் எல்லாம்,
இங்கே மண் போட்டு மூடிவிட்டார்.
சீரழியும் பண்பாட்டை சீரமைக்க,
ஓரணியில் ஒன்றுபட்டால் உண்டு.
கள்ளின் ம
தேன் கட்டும் கூடு ஒரு விசித்திரம்.
தேனைத் துளி துளியாய்ச் சேர்த்து,
சிந்தாமல் சிதறாமல் சேமிக்கும்,
சிறந்த வித்தையது கற்றதெங்கே?
சிட்டுக்குருவி கூடுகட்டி அந்த
கூட்டின் வாசல் கீழே வைக்கும்.
தெளிவான திட்டத்தில் அது கட்டிய
கூடு.
மெலிதான குஞ்சுகளின் பாதுகாப்பு
வீடு.
கற்பனையாய்க் கவி புனைய,
சிறகுள்ள குருவிக்கு தெரியாது.
கவியெனக்கு காற்று பிளந்து,
புவிவானை நீந்தத் தெரியாது.
உனக்கரிது, எனக்கது எளிது.
எனக்கெளிது, உனக்கது அரிது.
மெய் பார்த்து மருந்துரைப்பான்
ஒருவன்.
பொய் கோர்த்து கவியுரைப்பான்
ஒருவன்.
நாடு காத்து எல்லை நிற்பான்
ஒருவன்.
காடுழுது கதிரறுப்பான்
ஒருவன்.
ச
இன்றைய இளைஞர்கள்
அலுவல் நேரம் மட்டுமின்றி
மற்ற நேரங்களிலும்
உயிரற்ற பொருளாம்
கணனியின் தோழமையுடனேயே
இருக்கின்றனரே! ஏன்?
புரிதலை கணனி இவர்களிடம் காட்டுகிறதா?
இவர்கள் கணனியிடம் காட்டுகிறார்களா?
தங்கள் தேவைகளை
கணனியின் மொழியில்
கணனி மென்பொருளிடம்
தெளிவுபடுத்த
அது
பயனாளி நட்பு* மொழியில்
பதிலிறுக்கிறது!
கணனி மொழியில் தாங்கள் சொல்லும்போது ,
இவர்கள் அதனிடம் புரிதலை காட்டுகிறார்கள்!
பயனாளி நட்பு* மொழியில் பதில் தரும்போது
கணனி இவர்களிடம் புரிதலை காட்டுகிறது!
ஆக
பரஸ்பர தோழமை நிலைக்கிறது!
* பயனாளி நட்பு என்றால் "யூசர் பிரெண்ட்லி" என்று பொருள்
பத்து மாதங்கள்
கருப்பைக் காலத்தே
குழந்தையைப் புரிதலை
தாய் தொடங்குகிறாள்!
பிறந்து......
ஓரளவேனும்
வளர்ந்தபின் அன்றோ.........
மற்றைய நட்புகள்!
ஆயின்...........
முதல் தோழி --
முழுமுதல் தோழி
குழந்தைக்கு யார்!
தாய்தானே!
தந்தையின் நட்பு, குருவின் நட்பு, சமவயதோர் நட்பு
அத்தனை நட்பையும் அறிமுகம் செய்வது........
தாய்தானே!
அத்தனை நட்பையும் தேடித் தந்தாலும்
தன்னுடைய நட்பையும் விலக்கி விடாமல்
கருணையோடு அள்ளித் தருபவள்
தாய்தானே!
அன்போடு நில்லாது
பல்கலை அறிவும் தருவதால்
தந்தையும் ஆனவர் தாய்தானே!
ஆக............
கரு அமர்ந்த காலந்தொட்டு......
என்றுமே..........!
புரிதல்களாய் தொடர்ந்து தரும்
தோழி
தோழமை என்பது என்ன?
பாசம் என்பது என்ன?
தோழமை என்பது........
உறவல்லா ஒரு நண்பனிடம் காட்டும்
உறவோ என பிரமிக்க வைக்கும்
ஆழ்ந்த பாசம்!
பாசம் என்பது.........
உடன்பிறந்த சகோதரனிடம்.......
பெற்ற தாயிடம்..........
பெற்ற மகனிடம்.......ஏன்.......
நெருங்கிய எந்த உறவிடமுமே காட்டும்
ஆழ்ந்த தோழமை!
இதில் ஏன் ஒப்பீட்டு ஆராய்ச்சி?
இரண்டுக்கும் அடித்தளம்
புரிதல் வழி பிறந்த
இரு பக்க நம்பிக்கைதானே!
நம்பிக்கை வழி பாசம்தானே!
பழகும் நபரை எல்லாம் - நாம்
புரிந்து கொண்டோம் எனில்
புரிதல்கள் யாவும்
தோழமை ஆகிடுமே!
தோழமை பிறக்க
பழக்கம் அவசியம்!
தோழமை நிலைக்க..........?
புரிதல் அவசியம்!
புரிதல் என்றால்.......?
நம் நலம் கருதி
நம் தவறு கடிந்திடும்
நண்பனின் சினம் புரிதல்!
நண்பனின் விருப்பும்
நண்பனின் வெறுப்பும்
அவன் கூறாதே புரிதல்!
அன்புப் புன்னகையில்
அவன் மறைத்த தன் துயரை
உடன் கண்டு துடைக்கும் புரிதல்!
ஒத்திருக்கும் கருத்துகளில்
அவனோடு மகிழப் புரிதல்!
வேறுபடும் கருத்துகளோடு
அவனை ஏற்கப் புரிதல்!
பிரிதல் அற்ற புரிதலின்
வழிமுறைகள் இவை என அறிக!
அய்யா! வணக்கம்!
'புரிதல்கள் யாவும் தோழமையாய்" என்று இப்போதுள்ள கவிதை போட்டிக்கு,நேற்றிரவு பத்து மணிக்கு ஒரு கவிதை சமர்ப்பித்தேன்! அது போட்டியில் சேரவில்லை. "மற்ற போட்டிகளுக்கு சமர்ப்பிக்க " என்ற செக் பாக்ஸில் டிக் செய்து சமர்ப்பித்தேன்! அது சரியா? தவறா? சரி எனில் கவிதையை போட்டியில் சேர்க்கும்படி
பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.நேற்று போட்டி புகார்/ கருத்து பகுதியில் இதை தெரிவித்திருந்தேன்; பதில் எதிர்பார்க்கிறேன்!
இன்றும் ஒரு கவிதை அதே போட்டிக்கு அனுப்பியிருக்கிறேன். இந்த கவிதைக்கு " மற்ற போட்டிகளுக்கு சமர்ப்பிக்க" என்ற செக் பாக்ஸில் டிக் செய்யாமல் சமர்ப்பித்திருக்கிறேன்.அப்படி டிக் செய்வத
வாசகர்களுக்கு வணக்கம்,
இது பிரதிலிபியின் இந்த வருடத்துக்கான கதைப்போட்டி. இனி வருடாவருடம் டிசம்பர் - ஜனவரியில் கதைகளுக்கான இந்த சங்கமம் நடந்துகொண்டே இருக்கும். பெரிய படிகளின் தொடக்கமாக இதனை கருதுகிறோம். வழக்கம்போல் உங்கள் ஆதரவினை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கதைகள் நம் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தவை. பெற்றோர்களிடம், தாத்தா பாட்டிகளிடம், நண்பர்களிடம், காதலியிடம், குழந்தைகளிடம் என நாம் அனைவரிடமும் எப்போதும் ஏதோ ஒரு கதையை பேசிக்கொண்டே தான் இருக்கிறோம். கதைகளின் மாயச் சுழலில் தப்பித்தவை என அநேகமாக எதுவுமில்லை. ஆம். இது கதை சூழ் உலகு. கதைகளாலேயே இவ்வுலகம் சுழல்கிறது.
இன்று நாம் வாழ்வது நாளை இ
படித்தலின் முக்கியத்துவம் என்ன பள்ளியில் கடவுள் வழிபாட்டின் பொது கூற வேண்டிய தகவல் படித்தலின் முக்கியத்துவம்
எழுத்து பொங்கல் போட்டி 2016 -----எண்ணம் 05 ----தலைப்பு -- பொங்கல் பாடல்கள்---அவை புதையல் பேழைகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில ஊர்கள் ...
1) சிறுநாடார்குடியிருப்பு
2) உடன்குடி
3) குலசேகரபட்டினம்
4) மணப்பாடு
5) படுக்கபத்து
6) திசையன்விளை
7) பேய்குளம்
8) பெருமாள்குளம்
9) நயினார்பத்து
10) கீரைகாரன்தட்டு
நீங்கள் கூகிள் மற்றும் விக்கிபீடியா மூலம் ஊர்களை தேடி பதிவு செய்யவும்