நிலவு ஏனோ இன்னும் வரவில்லை

நிலவு ஏனோ இன்னும் வரவில்லை

சூரியன் வானத்தை
கை விட்டு
போய் விட்டான்

இருளின் பிடியில்
இறுக்கி இருக்கும்
இந்த பூமி

எதிர்பார்த்து காத்திருக்கிறது
நிலவின் வெளிச்சத்துக்கு

பூமிக்கு தெரியாது
கருமேகங்கள்
நிலவை சிறை
வைத்திருப்பதை

கதாநாயகனாய்
காற்று வந்து
காப்பாற்றுவான்
என்று காத்திருக்கிறது
இந்த நிலவும்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (24-Oct-23, 9:48 am)
பார்வை : 109

மேலே