விவசாயம் செய்வோம்

விவசாயம் செய்வோம்
...........................................

ஏர் பிடித்த கைகள் எல்லாம் /
ஏவுகனைகள் விட துணிந்து போயிருச்சு /

விவசாயம் நலிந்து உணவு பற்றாக்குறை/
வந்திருச்சு விவசாயத்திற்கு மீன்டும்மவுசு கூடிருச்சு /

மாதம் மும்மாறி மழை பொழிந்து /
மனதுடன் கன்மாயும் முழுமையாக நிறைந்திருச்சு/

மயிலைக்காளை ரெண்டு பூட்டி உழுது/
மண்ணை நம்பி வயல் எல்லாம் /

விதை விதைத்து மண்ணெல்லம் பொண்ணாக /
விளைய வைப்பாள் மாரி ஆத்தா /

விளைந்த நெல் குனிந்திருச்சு உழவன்/
வாழ்க்கை சமுதாயத்தில் வானாக நிமிர்ந்திருச்சு/

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (23-Oct-23, 3:44 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : vivasaayam seivom
பார்வை : 453

மேலே