கால்நடை
கால்நடை
&&&&&&&&
விவசாயிகளின் தோழனாக
வெள்ளாடும் மாடுகளும்/
புல்லைக் கொடுத்திடுவான்
பிள்ளையாக வளர்த்திடுவான் /
செல்லப் பெயரிட்டு
செல்லமாக அழைத்திடுவான் /
செல்வங்களை வழங்கிடும்
செல்வலட்சுமி கால்நடைகள்/
உழவுத்தொழிலுக்கு உயிரான
உரமாகச் சாணம்தந்து /
விவசாயிகளின் வாழ்வினில்
வறுமையை நீக்கிடும்/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்