பரமனுக்கு வந்ததாம் ஞானம்

பறவைகளும் விலங்குகளும் பரமனின் பரம பக்தர்களாம்
பண்பற்ற மனதர்களின் புண்படுத்தும் செயல்களை நினைத்து வருத்தப்பட்டனவாம்.
வாய்விட்டு கதறி வனராஜாவிடம் போய் விண்ணப்பித்தனவாம்;
மனுவை பரிசீலித்த வனராஜாவுக்கும் வந்ததாம் வருத்தம்;
வனமும் வம்ச இனமுமான விலங்குளும் பறவைகளும்
வதைபடும் செயலுக்கு எதிர்த்து போர் கொடி தூக்கியதாம் வனங்களே;
தாக்கும் மனிதனிடம் இருந்து காத்துக்கொள்ளவும்
காடு கழனியை அழிக்கும் மனிதனின் வெறிசெயலுக்கு முற்றுப்புள்ளிவைக்க
பெரும் போராட்டம் செய்ய முடிவு செய்தனர்.
வனராஜாவோ யுத்தத்தால் தீர்வு பிறக்காது வதம் வேண்டாம்
தவம் இருப்போம் . தவத்தால் வரம் பெருவோம்,
படைத்த பரம் பொருளை நினைத்து யாகம் வளர்ப்போம்,
பரமன் வரட்டும் பார்த்துக்கொள்வோம்,
நாம் ஒரு பிடி பிடிப்போம் என்று தீர்மானித்து,
வனத்தின் மத்தியில் பெரும் யாகம் வளர்க்க முனைந்தது, விலங்குகளும் பறவைகளும்;
சுரண்டப் படுவதால் கோபம் கொண்ட நிலமும் கூட்டு சேர்ந்ததுவாம்;
பெரும் மகாயாகம் வளர்க்க வனத்தில் நிலமும் இடம் தந்ததுவாம்;
மரம் செடி கொடிகள் எல்லாம் சேர்ந்து தவம் வளர்க்க மரங்களையும் சுல்லிகளையும் தருவோம் பெரும் யாகம் வளர்க்கபடட்டும்
வனத்தை அழிக்கும் மனிதனுக்கு ஒரு பாடம் கற்பிப்போம் என்றதாம்;
யாகத்தீயும் மூட்டப்பட்டது,
ஒரு யுகமே முடியப்போவது போன்ற நிலைதான்;
பறவைகள் சுல்லிகளை பொருக்கி வர
விலங்கினங்கள் மரங்களிடம் இருந்து கட்டைகளை எடுத்துவர,
தீ பறவியது பரமன் இருக்கும் விண்ணுலகுவரை,
பார் எங்கும் இருள் சூழ்ந்தது;
பெரும் தவிப்பு பத பதைப்புத்தான்,
பயம் பற்றிக் கொண்டது மனிதர்கள் மத்தியில்;
யார் தந்த சாபமிது புவியே எரி கின்றதே என்றது ஒரு வேதாந்த கூட்டம்;
யார் விட்ட ஏவுகணையோ புவி பத்திஎறிகின்றதே,
வேத்துலகவாசியின் கைங்கரியமா வேத்து கிரகணங்களின் மோதலா என்று ஆராயத்துவங்கியது விஞ்ஞானிகளின் கூட்டம்;
அட அசடு மனிதன் பாவம் செய்துட்டான்,
பரமனுக்கே பொறுக்கல அதான் பூமியை எரிச்சுட்டான் என்றது பரமபக்தரின் கூட்டம்;
எந்த கோல்களிலில் இருந்தோ வந்து புவிக்கு எரியூட்டியனர் என்றது சிந்தாந்த கூட்டம்.
சாமி நாடே எரிந்தாலும் எங்க வீடுமட்டும் எரியக் கூடாது என்று கும்பிட துவங்கியது சுயநல வாதிகளின் கூட்டம்;
தங்கள் பணம் பதுக்கிவைத்த பொருள்களை எண்ண ஆரம்பித்தது சில அரசியல் வாதிகளின் கூட்டம்;
அய்யோ அய்யோ என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறியதாம் பேராசைக்கூட்டம்;
ஒரே குழப்பம் தான், கூச்சல் தான்;
கடலே கொதிக்க ஆரம்பித்தது வெட்கை தாங்காது,
பரமனுக்கு தகவல் செல்ல, பரமனும்
இது மனிதனின் தாண்டவமா விஞ்ஞான விபரீதமா;
தப்பாய் போன விஞ்ஞானிகளின் விண்கலனின் விபரீதமா;
வேற்று லோக படை எடுப்பா;
மனித யுத்தமா இத்தனை சப்தம் வர என்று சிந்தித்து
எட்டிப்பார்த்தால், வனத்தின் நடுவில் நடத்தப்படும் வித்யாசமான யாகத்தை கண்டு அதிர்ந்து ஆடி விட்டார் பரமன்;
இனியும் தாமதித்தால் பேர் இடர்தான்,
புவியே பஸ்பமாகிவிடும் என்று புறப்பட தயாரானார் பரமன்;
வனங்களின் விலங்குகள் பறவைகளின் விடாபிடி யாகத்தை காண பூலோகம் புறப்பட்டு வந்தார் புல்லட் வேகத்தில்;
விலங்குகள் பறவைகளின் விபரீத யாகத்தை கண்டு மனம் இறங்கினார்
பரமனும்; யாகத்தீயில் காட்சி தந்து
வனங்களே, வன விலங்குகளே, பறவைகளே என்ன குறை என்றார்.
ஏன் இத்தனை பெரிய போராட்டம், மனிதனிடம் இருந்து போராட கூச்சல் போட, புகை மூட்டம் போட கற்றுக்கொண்டீர்களா என்றார் பரமன்.

இல்லை இல்லை பரமனே இது எங்கள் ஆதங்கம்,
எல்லோரும் பேசுவதால் ஒன்றும் விலங்க வில்லை என்றார் பரமன்.
வன ராஜாவோ முன் வந்து நின்று, பிரபுவே வணக்கம்,
உங்கள் படைப்பில் பயந்து பயந்து வாழும் அபலைகளின் கூக்குரல்.
அழகான வனத்தைத் தந்து, அதில் எங்களை உலாவ விட்டீர்கள்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் அழகாய் வாழ்ந்து வந்தோம்,
அழகிய வனத்தில் இந்த மரங்களும் செடி கொடிகளும் பூத்து குலுங்கின
கனிகள் பெருகியது,
பறவைக் கூட்டம் உண்டு தங்கி,
தங்கள் இனங்களையும் பெருக்கின.
விலங்குகளும் தங்கள் வம்சத்தை பெருக்கி வந்தன.
நிலமும் நிம்மதியாய் உறங்கியது எந்த வித பயமும் இன்றி,
நதிகளும் தங்கள் விருப்பப்படி
புறப்பட்டு புரண்டு திரிந்து கடலை போய் அடைந்தது,
வந்தது பேராபத்து மனிதனால்,
மனிதன் எங்களை அழிக்க வனத்திற்குள் புகுந்து எங்களை வேட்டையாடினான்,
மரங்களை வெட்டி காடுகளை நாடாக்கினான்,
போதாக்குறைக்கு நதியை தடுத்தான்,
மண்ணை சுரண்டினான்,
அவன் பேராசைக்காக நிலங்களை அபகரித்தான்;
வாழ்வு தந்த எங்களையே வேட்டையாடத்துவங்கினான் என்றது வன ராஜா;
மேலும் இதற்கெல்லாம் உன் ஓர வஞ்சனைதான் காரணம் என்றது.
பரமனும் குழம்பிப்போய் முழியை பிதிக்கினார்
புரியவில்லையே விவரமாக கூறு என்றார்

6 அறிவு அவர்களுக்கு தந்து விட்டு 6க்கும் குறைந்த அறிவை எங்களுக்கு தந்தீர், விளைவு,
6 அறிவை அவன் அழிவுக்கு பயன்படுத்த ஆரம்பித்தான்,
காடுகளை அழிக்கின்றான், விலங்கு பறவைகள் மரங்களைவிட்டு வைக்கவில்லை,
பரமனும், உண்மை தான் அவன் ஆட்டம் புவியையும் தாண்டிவிட்டது என்று கூறி முடிக்க,
காட்டரசனும், எனவே தான் யாகம் வளர்த்து உங்களை அழைத்தோம் என்றது.
விலங்கினங்களும் பறவைகளும்
படுத்திய பாதகத்தைக் கேட்டு
பரமனுக்கே பட படப்பு வந்தது;
இந்த மனித இனப்பெருக்கம் மண்ணுலகை தாண்டி விண்ணுலகத்திற்கே வந்து விடுமே என்ற பயம் பரமனுக்கு வரத்துவங்கியது.
வைரஸ்களை அனுப்பியும்
வம்பாய் வீட்டுக்குள் கிடந்தவன்
இன்று வைரஸை கட்டுப்படுத்திவிட்டானே தன் மூளையால் என்று ஆச்சரியப்பட்ட பரமன்,
பட்டும் பாடம் படிக்காது
மீண்டும் துவங்கிவிட்டானே சேட்டைகளை;
ஆசைக்கு அடிமையாகி ஆட்டம் போடத்துவங்கிவிட்டார்களே என்று பரமனும் கோபப்பட்டார்.
மேலும், நானே குழம்பிக் கிடக்கின்றேன் என்றார்.
கூட்டத்தில் இருந்த குள்ள நரி ஒன்று
உங்கள் குழப்பம் தீருவதற்குள் உங்கள் குடும்மியையே பிடிக்க வத்திடுவர் மனிதர்கள் என்றது.
பெரிய ஆலோசனை தான்; வனம் எங்கும் நீடித்தது மௌனம்,
காடுகளில் செடி கொடி மரங்கள் கூட ஆடாது அசையாது நின்றன;
புவியின் சப்த நாடியே ஒருகனம் நின்று விட்டது.
மனிதர்கள் சுவாசம் விட முடியாது தினரினார்கள்;
என்ன என்ன என்னாச்சி என்ற கேள்விதான் எத்திசையிலும்,
காற்றை காணவில்லையே கடன் காரன் எவன் திருடிப்போனானோ என்ற கூச்சல் தான்,
மேல் மூச்சி கீழ் மூச்சி பரமனுக்கே எடுக்க துவங்கியது.
நல்ல தீர்வை எட்ட, கூட்டம் போட்டு 10 நிமிடம் யோசித்து முடிவை எடுங்கள் என்றார் பரமனும்

கூட்டுயோசனை கலந்துரையாடல் நடக்கத்துவங்கிய நடுவில் நாய் அவர்கள் நடுவராக நிருத்தப்பட்டார்
மனிதனுடன் நெருங்கி பழகியது நாய் தானே என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
நாயும் தன் கருத்துக்களை பரிமாரியது,
யானையும் தன் பெருத்த சரீரத்தில் பதிங்கி இருந்த மூளையை பயன்படுத்தி உபயோகமான கருத்தை தந்தது.
மனிதனைப்போன்று தங்களுக்கும் 6ம் அறிவு வேண்டும் என்று முடிவு எடுத்தனர்.
கூட்டம் இந்த கருத்தை ஏற்றுக்கொண்டவுடன்
வனராசாவும் படைப்பின் அதிபதியே போதும் இன்றளவு இருந்த பாரபட்சம்,
கொடுத்திடு 6ம் அறிவை எங்களுக்கும் என்றது.
பரமனும் இதைக் கேட்டு திடுக்கிட்டார்
ஆறாம் அறிவை வைத்து ஆட்டிப் படைக்கும் மனிதனின் ஆட்டமே தாங்க முடியவில்லை.
இனி 6 அறிவை இவர்களுக்கும் கொடுத்து விட்டால் என்னாவது புவி என்று சற்று யோதித்தார்,
பரமனுக்கும் ஞானம் வந்தது
படைப்பின் பெறும் தவறே
மனிதனுக்கு தந்த 6ம் அறிவு தான்
என்று புரிய வந்தது.
புரிந்து கொண்ட வனராசாவும்
பரமனே பயப்பட வேண்டாம்.
6ம் அறிவை வைத்து மனிதனைப்போன்று ஆட்டி படைக்க மாட்டோம்
அட்டூழியங்கள் செய்யமாட்டோம்,
ஆபத்தை உருவாக்க மாட்டோம்.
அன்பிற்காகவும் அறத்திற்காகவும், அறியாமையை போக்கவும், எங்களை பாதுகாக்க பயன் படுத்துவோம், பேராசைக்கு பயன் படுத்த மாட்டோம் என்றது.
6ம் அறிவை வைத்து சாதனை படைப்போம்
அசிங்கத்தையும் அருவருப்பையும் நீக்குவோம்
மனிதவெறியை தனிப்போம்
எல்லையில்லா தேசத்தில் நேசத்தை உருவாக்குவோம்.
தேசத்தை நாசப்படுத்தாது
எங்கும் பசுமை படைப்போம்
நதியை மனிதனஅடக்கு முறையிலிருந்து விடு பட வைப்போம்.
எங்கும் யாவருக்கும் நீர் கிடைக்க நீர் நிலைகளை உயர்த்துவோம்;
வளங்களை சுரண்ட மாட்டோம்;
அழகான வனத்தை உருவாக்குவோம்;
விவசாயத்தை காப்போம்;
மண்ணையும் சுரண்ட மாட்டோம்
வனம் காப்போம் இனம் காப்போம்;
விலங்குகள் இனி அடித்து உண்பதை விட்டு, அன்புடன் இணைந்து காய் கனிகளை உண்போம்;
எங்கும் பசுஞ்சோலைகளை உருவாக்குவோம்.
மரங்களும் இசைந்தன ஆம் ஆம் என்று இலைகளையும் கிளைகளையும் ஆட்டின.
வெயிலுக்கு குடையாய் இருப்போம்
வேதனை தீர்க்க மருந்தாவோம்
அன்பால் உங்களை மகிழ வைப்போம் என்றன.
விலங்குகளும் வாகனமே இல்லா உலகை படைப்போம்;
மனிதர்களை அடக்கி வைப்போம்;
மக்கும் அவன் சிந்தனையை தூய்மையாக்குவோம்;
6வது அறிவை பயன் படுத்தி, போரே வராமல் தடுப்போம்;
ஏவுகணைகளை எய்தால் செயல் இழக்க செய்வோம்.
நிலத்தை சுரண்டுபவனை நிலத்தின் மீது கால் வைக்க முடியாது செய்திடுவோம் என்றன.
மனிதனின் பேராசையை தடுக்க கருவி கண்டு பிடிப்போம் புவி குடும்பத்தை தூய்மை படுத்த கூட்டு முயற்ச்சி எடுப்போம் என்றன.
ஆரோக்கியமான புவியை உருவாக்குவோம் என்றன.
பரமனுக்கு வந்தது ஞானம்.
படைப்பின் பிழையை அறிந்து
பிழையை அழிக்க முயன்றான் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் மரம் செடி கொடிகளுக்கும் கிடைத்ததாம் பகுத்தறிவு என்னும் 6ம் அறிவு.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (23-Oct-23, 8:40 am)
பார்வை : 16

மேலே