கனவை கலைக்காதே
பயிர் தாகம்
தீர்க்க வா
உயிர் தாகம்
தீர்க்க வா
கொலை வெறியை காட்டாதே மழையே.....
சினம் ஆறி இறங்கி வா
மழையே...
தீ அணைக்க திறனிருத்தும்
பய தீயை மூட்டாதே
மழையே...
கொடை வள்ளலல்லவா
விழி நீரை பருகாதே
மழையே...
கனவை கலைக்காதே
மழையே...