சேர்த்தவர் : Dileepan Pa, 24-Nov-16, 12:20 pm

ஒரே ஒரு ஊர்ல - பிரதிலிபியின் மாபெரும் கதைப்போட்டி

ஒரே ஒரு ஊர்ல - பிரதிலிபியின் மாபெரும் கதைப்போட்டி போட்டி | Tamil Competition
போட்டி விவரங்கள்

வாசகர்களுக்கு வணக்கம்,

இது பிரதிலிபியின் இந்த வருடத்துக்கான கதைப்போட்டி. இனி வருடாவருடம் டிசம்பர் - ஜனவரியில் கதைகளுக்கான இந்த சங்கமம் நடந்துகொண்டே இருக்கும். பெரிய படிகளின் தொடக்கமாக இதனை கருதுகிறோம். வழக்கம்போல் உங்கள் ஆதரவினை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கதைகள் நம் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தவை. பெற்றோர்களிடம், தாத்தா பாட்டிகளிடம், நண்பர்களிடம், காதலியிடம், குழந்தைகளிடம் என நாம் அனைவரிடமும் எப்போதும் ஏதோ ஒரு கதையை பேசிக்கொண்டே தான் இருக்கிறோம். கதைகளின் மாயச் சுழலில் தப்பித்தவை என அநேகமாக எதுவுமில்லை. ஆம். இது கதை சூழ் உலகு. கதைகளாலேயே இவ்வுலகம் சுழல்கிறது.

இன்று நாம் வாழ்வது நாளை இன்னொருவருக்கு கதையாகலாம். வேறொருவருடைய வாழ்க்கை நமக்கு இன்று கதையாகலாம். அப்படி உங்களுக்கு தெரிந்த, தெரியாத, வாழ்ந்த, வாழவிரும்பிய, கேட்ட, கேட்கவிழையும் கதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.

பரிசு விவரங்கள்

ஒருவர் அதிகபட்சமாக 5 கதைகள் வரை அனுப்பலாம்.

போட்டிக்கு கதைகள் மட்டுமே அனுப்பவேண்டும்.

கதைகள் குறைந்தபட்சம் 600 வார்த்தைகளுக்கு மேல் இருக்கவேண்டும்.

வாசகர்கள் மட்டுமே வெற்றி பெரும் படைப்புகளை தேர்ந்தெடுப்பார்கள்.

படைப்புகளுடன் உங்களது தொலைபேசி எண்ணும், உங்களது மின்னஞ்சல் முகவரியும் அனுப்பிவைக்கவும். எங்களது அனைத்துத் தகவல் பரிமாற்றங்களும் மின்னஞ்சல் மூலமே இருக்கும்.

மொத்தம் ஐந்து வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்து அனைவருக்கும் தலா 1000ரூ பரிசுத் தொகை கொடுக்கவிருக்கிறோம்.

படைப்புத்தேர்வில் பிரதிலிபியின் முடிவே இறுதியானது.

தொடர்புக்கு – 9206706899 / 7022370004

ஆரம்ப நாள் : 24-Nov-2016
இறுதி நாள் : 15-Dec-2016  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 10-Jan-2017

ஒரே ஒரு ஊர்ல - பிரதிலிபியின் மாபெரும் கதைப்போட்டி போட்டி | Competition at Eluthu.com


மேலே