புரிதல்கள் யாவும் தோழமையாய்

இன்றைய இளைஞர்கள்
அலுவல் நேரம் மட்டுமின்றி
மற்ற நேரங்களிலும்
உயிரற்ற பொருளாம்
கணனியின் தோழமையுடனேயே
இருக்கின்றனரே! ஏன்?
புரிதலை கணனி இவர்களிடம் காட்டுகிறதா?
இவர்கள் கணனியிடம் காட்டுகிறார்களா?

தங்கள் தேவைகளை
கணனியின் மொழியில்
கணனி மென்பொருளிடம்
தெளிவுபடுத்த
அது
பயனாளி நட்பு* மொழியில்
பதிலிறுக்கிறது!

கணனி மொழியில் தாங்கள் சொல்லும்போது ,
இவர்கள் அதனிடம் புரிதலை காட்டுகிறார்கள்!
பயனாளி நட்பு* மொழியில் பதில் தரும்போது
கணனி இவர்களிடம் புரிதலை காட்டுகிறது!
ஆக
பரஸ்பர தோழமை நிலைக்கிறது!

* பயனாளி நட்பு என்றால் "யூசர் பிரெண்ட்லி" என்று பொருள்

எழுதியவர் : ம கைலாஷ் (16-Jul-20, 11:52 pm)
சேர்த்தது : M Kailas
பார்வை : 491

மேலே