புரிதல்கள் யாவும் தோழமையாய்

பத்து மாதங்கள்
கருப்பைக் காலத்தே
குழந்தையைப் புரிதலை
தாய் தொடங்குகிறாள்!
பிறந்து......
ஓரளவேனும்
வளர்ந்தபின் அன்றோ.........
மற்றைய நட்புகள்!
ஆயின்...........
முதல் தோழி --
முழுமுதல் தோழி
குழந்தைக்கு யார்!
தாய்தானே!

தந்தையின் நட்பு, குருவின் நட்பு, சமவயதோர் நட்பு
அத்தனை நட்பையும் அறிமுகம் செய்வது........
தாய்தானே!
அத்தனை நட்பையும் தேடித் தந்தாலும்
தன்னுடைய நட்பையும் விலக்கி விடாமல்
கருணையோடு அள்ளித் தருபவள்
தாய்தானே!
அன்போடு நில்லாது
பல்கலை அறிவும் தருவதால்
தந்தையும் ஆனவர் தாய்தானே!
ஆக............
கரு அமர்ந்த காலந்தொட்டு......
என்றுமே..........!
புரிதல்களாய் தொடர்ந்து தரும்
தோழியாம் தாயை போற்றுவோம்!

எழுதியவர் : ம கைலாஷ் (16-Jul-20, 10:57 pm)
சேர்த்தது : M Kailas
பார்வை : 251

மேலே