புரிதல்கள் யாவும் தோழமையாய்

தோழமை என்பது என்ன?
பாசம் என்பது என்ன?
தோழமை என்பது........
உறவல்லா ஒரு நண்பனிடம் காட்டும்
உறவோ என பிரமிக்க வைக்கும்
ஆழ்ந்த பாசம்!
பாசம் என்பது.........
உடன்பிறந்த சகோதரனிடம்.......
பெற்ற தாயிடம்..........
பெற்ற மகனிடம்.......ஏன்.......
நெருங்கிய எந்த உறவிடமுமே காட்டும்
ஆழ்ந்த தோழமை!
இதில் ஏன் ஒப்பீட்டு ஆராய்ச்சி?
இரண்டுக்கும் அடித்தளம்
புரிதல் வழி பிறந்த
இரு பக்க நம்பிக்கைதானே!
நம்பிக்கை வழி பாசம்தானே!
பழகும் நபரை எல்லாம் - நாம்
புரிந்து கொண்டோம் எனில்
புரிதல்கள் யாவும்
தோழமை ஆகிடுமே!

எழுதியவர் : ம கைலாஷ் (16-Jul-20, 7:37 pm)
சேர்த்தது : M Kailas
பார்வை : 194

மேலே