புரிதல்கள் யாவும் தோழமையாய்

தோழமை பிறக்க
பழக்கம் அவசியம்!
தோழமை நிலைக்க..........?
புரிதல் அவசியம்!
புரிதல் என்றால்.......?

நம் நலம் கருதி
நம் தவறு கடிந்திடும்
நண்பனின் சினம் புரிதல்!

நண்பனின் விருப்பும்
நண்பனின் வெறுப்பும்
அவன் கூறாதே புரிதல்!

அன்புப் புன்னகையில்
அவன் மறைத்த தன் துயரை
உடன் கண்டு துடைக்கும் புரிதல்!

ஒத்திருக்கும் கருத்துகளில்
அவனோடு மகிழப் புரிதல்!
வேறுபடும் கருத்துகளோடு
அவனை ஏற்கப் புரிதல்!

பிரிதல் அற்ற புரிதலின்
வழிமுறைகள் இவை என அறிக!

எழுதியவர் : ம கைலாஷ் (14-Jul-20, 4:15 pm)
சேர்த்தது : M Kailas
பார்வை : 275

மேலே