நீல டிக்
தேவையில்லை
நீயும்
உன் நினைவுகளும்
உன்னை பற்றிய நினைவூட்டிகளும்
என நான் சொல்லி ; அவள் கேட்டு
வெளியேறினாள்!!
அன்று
பகல் முழுவதும் அவளது நினைவுகள்
எட்டி பார்க்கவில்லை !
ஆகையால் என்னவோ எனக்கு கர்வம் எட்டி பார்க்க...
இரவு
இழுத்து போர்த்திய போர்வை முழுதும்
அவளது ஸ்பரிசமும் நறுமணமும்
என்னை முழுவதுமாக மூழ்கடித்தது!
"திரும்பி வா" என்றேன் குறுஞ்செய்தியாக!!
நொடியில் அது "நீல டிக்" என மாற....
- தினேஷ் ஜாக்குலின்