ரசிக்கிறேன்
நித்திரையில்
என் தலை கோதி;
நெற்றி மத்தியில் வெப்பமென முத்தமிடுவாள் !
புருவங்கள் தடவி ; கன்னங்கள் கிள்ளி எச்சில் பட முத்தமிடுவாள் !!
ஒரு கை விரல் உதட்டின் மேல் மீசையை வருட ;
கீழ் உதட்டை தன் மறு கை இரு விரல் குவிய பிடித்து , கடித்து முத்தமிடுவாள் !!!
நித்திரை கலைந்து எழுந்தவன் ...
என்ன டி ?? என்பேன்..
சட்டென என் கழுத்தின் உள் அவள் முகம் புதைத்தவள் ;
வெட்கம் வெளியேற ,
" உன்னை ரசிக்கிறேன்" என்பாள்....
- தினேஷ் ஜாக்குலின்