உளி படாத சிற்பமே
உளி படாத சிற்பமே
××××××××××××××××××
நிலவினைக் கண்டவன்
நிலத்தில் படைத்தானோ
உலவிடும் சிலையை
உளியின்றிப் வடித்தானோ
ஏதேன் தோட்டத்து
ஏவாளிடம் பறித்த
ஆப்பிளில் படைத்தானோ
அழகியச் செவ்விதழை
மேகத்தைப் பிடித்து
மேனிதனை செதுக்கினானோ
மோகத்தைத் தூண்டுதடி
மோனாலிசா ஓவியமே
மின்னலைப் பிடித்து
மெல்லிடை செய்தானோ
இன்னலைத் தருகிறுதே
இனியவள் இடையழகே
#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்