உதய குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : உதய குமார் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 31-Mar-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 202 |
புள்ளி | : 11 |
ஏதோ கொஞ்சம் ஜென்டில்மேன்...
என்றைக்குமே இந்தியன்...
கவிதைகளின் காதலன்...
நன்மைக்கு என்றும் முதல்வன்...
தீமைக்கு என்றும் அந்நியன்...
நடிக்கத் தெரியாத சிவாஜி...
AI இல்லாத எந்திரன்...
எதிரிக்கும் நண்பன்...
இது தான் I(நான்)...
'கொள்ளை அழகு' கேள்விப்பட்டிரு
'அழகு கொள்ளை' உன்னிடத்தில் தான் கண்டேன்
எத்தனை தேவதைகளிடம் கொள்ளையடித்தாயோ
இந்த அழகை...!
நீல மேகம் தெளிக்கும்
மழைத்துளிகளால் உலகம் வாழலாம்...
வண்ணபூக்கள் தெளிக்கும்
தேன்துளிகளால் தேனீக்கள் வாழலாம்...
இதயம் தெளிக்கும்
இரத்ததுளிகளால் உடலும் வாழலாம்...
ஆனால்
உன் இதழ் தெளிக்கும்
புன்னகைத்துளியால் தான் என் உள்ளம் வாழும்...
ஒரு விளம்பரம்..
கருப்பு சட்டை அணிந்த கல்லூரி மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்க்
உணர்ச்சி பொங்க பேசும் மாணவனுக்கு பின்னால் ஒரு மாணவன் ஒரு குளிர்பானம் அருந்துகிறான்.
எல்லார் கண்களும் அவன் பக்கம் திரும்புகின்றன.
#savethamirabara
சுதேச பொருட்களை புறந்தள்ளி அன்னிய பொருட்களுக்கு கை குலுக்கி இன்று மட்டும் எதிர்ப்பது எவ்வகையில் நியாயம்...
ரோட்டோரங்களில் எத்தனையோ பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் #இளநீர் விற்க்கிறார்களே
'கொள்ளை அழகு' கேள்விப்பட்டிரு
'அழகு கொள்ளை' உன்னிடத்தில் தான் கண்டேன்
எத்தனை தேவதைகளிடம் கொள்ளையடித்தாயோ
இந்த அழகை...!
இளவேனிற்பொழுதில்
இதமாய்,
இளஞ்சுடாய்,
இதயமிறங்கிய
காதல்..
முதுவேனிற்பொழுதில்
முரணாய்,
மழையாய்,
முத்தங்கள் நனைத்த
காதல்..
கார் பொழுதில்
கதிரவனாய்,
வெயிலாய்,
கன்னங்கள் உரசிய
காதல்..
இலையுதிர் பொழுதில்
சருகாய்,
தனியாய்,
இதயங்கள் உதிர்ந்த
காதல்..
மீண்டும்
இளவேனில்..
வின் ஞானம்
*** *******************************
கரு வின் ஞானம் உருப்பெற முனைந்திட
உரு வின் ஞானம் வெளிவரத் துடித்திடும்
குரு வின் ஞானம் சீடர்க்காய் துடிக்கையில்
திரு வின் ஞானம் மாலனைக் கவர்ந்ததே !
சிசு வின் ஞானம் தாயினை அணைத்திட
பசு வின் ஞானம் கன்றினைச் சார்ந்திடும்
கொசு வின் ஞானம் குருதியைக் குடிக்கவே
மீண்டும் மீண்டும்
விதையுறை தேடி ஓட வேண்டும்
முளை விட...
மீண்டும் மீண்டும்
தரையை தேடி ஓட வேண்டும்
தளிர் விட...
மீண்டும் மீண்டும்
தண்ணீர் தேடி ஓட வேண்டும்
வேர் விட...
மீண்டும் மீண்டும்
சூரியன் தேடி ஓட வேண்டும்
இலைகள் வளர...
மீண்டும் மீண்டும்
வண்டுகள் தேடி மணம் வீச வேண்டும்
இனவிருத்தி செய்திட...
மீண்டும் மீண்டும்
சருகுகள் உதிர்த்திட அசைந்தாட வேண்டும்
வறுமை சமாளிக்க...
ஓரிடத்தில் நிற்க்கும் மரமே
மீண்டும் மீண்டும் இவ்வளவு ஓட
உலகை அல்ல
அண்டத்தையே சுற்ற போகும் மனிதா!
சின்ன தோல்விக்கே
சிறகொடிந்து விழுந்தால் எப்படி?
முதல் முயற்சியில் வென்றால் திறமைசாலி
மீண்டும் மீண்
தணலின் முன் நாணலாய் அவள்
சூடாய் எதுவும் அருந்தியதில்லை
இன்று சூடே அவளை அருந்தபோகிறது
உயிரையும் ஒரே மடக்கில்
குடித்துவிட்டால் வலி தெரியாது..
சொட்டுச்சொட்டாய் ரசித்து குடித்தால்
ரணம் தாங்க முடியாதே...
நாணலாய் நெளிந்தாள்.
வருண பகவான் அழுது அடம் பிடிக்கலாமே..
எங்கே போனான்.
பூக்கள்.. வெயிலில் வாடலாம்
தீயில் வேகலாமா?
அன்று அடுப்பில் ஒரு சொட்டு
தீ சுட்டதற்க்கே அப்படி துடித்தேன்..
என்னவர் அதைவிட துடித்தார்.
இன்று எப்படி தாங்கி கொள்வார்
என்னையும் தீயையும்..
அவரின்றி வாழ்வில்லை தான்
ஆனால் உயிருள்ளதே
அதை சட்டென்று எப்படி
தீயில் நனைக்க முடியும்?
துணையின்றி பெண் வாழாது என்ற பயமா?
துணை
தாழிட்டு பூட்டி தரைவிரிப்பு போட்டு
போர்த்தி முகமும்மூடி
படுத்துறங்குகிறேன் நான்
எப்படியோ நுழைகிறாய் நினைவில்
================================
எப்பொழுதும் போலவே தினம்
ஏறிட்டு பார்த்து செல்கிறாய் நீ
எனக்கு மட்டுமே தெரியும்
தினம் தினம் வாசிக்க நீ புதுகவிதை
================================
வீதியில் இருசக்கர வாகனம்
புகைகளை பறப்பி செல்ல
உன் ஸ்கூட்டி மட்டுமெனக்கு
தென்றல் வீசி செல்லுது பெண்ணே
================================
வாழ்வில் விழுந்து எழுந்தவனுக்கு
வெற்றி உறுதியாம்
எனக்கு மட்டும் தரமறுக்கிறாய்
என்றோ விழுந்தேன் கன்னகுழியில்
================================
சி