ப்ரியனின் கிறுக்கல்கள்
தாழிட்டு பூட்டி தரைவிரிப்பு போட்டு
போர்த்தி முகமும்மூடி
படுத்துறங்குகிறேன் நான்
எப்படியோ நுழைகிறாய் நினைவில்
================================
எப்பொழுதும் போலவே தினம்
ஏறிட்டு பார்த்து செல்கிறாய் நீ
எனக்கு மட்டுமே தெரியும்
தினம் தினம் வாசிக்க நீ புதுகவிதை
================================
வீதியில் இருசக்கர வாகனம்
புகைகளை பறப்பி செல்ல
உன் ஸ்கூட்டி மட்டுமெனக்கு
தென்றல் வீசி செல்லுது பெண்ணே
================================
வாழ்வில் விழுந்து எழுந்தவனுக்கு
வெற்றி உறுதியாம்
எனக்கு மட்டும் தரமறுக்கிறாய்
என்றோ விழுந்தேன் கன்னகுழியில்
================================
சில நேரம் என்னிடம் முறைத்து
எதிர்வாதமிட்டு கோபப்படுகிறாய்
உன்னை புதுமை பெண்ணாய்
வளர்த்த பெருமை எனக்குமுண்டோ
================================
நீ வாசிக்க
கிறுக்கல்கள் கவிதையாகும்
நீ நேசிக்க
கிறுக்கனும் கவிஞனானேன்
================================
நன்றி : நற்கவிதைகள் எழுதி, எழுத தூண்டும் தோழர்கள்.
================================