என் அன்புத்தங்கைக்கு -சகி

அன்புத்தங்கைக்கு....

என் இல்லத்தின்
கடைக்குட்டி....

அம்மாவின் செல்ல
கிளிப்பிள்ளையவள்....

தங்கையாக எனக்கு
கிடைத்த வரம் அவள்....

அறியாப்பருவத்தில்
சண்டையிட்டு அழுத
நாட்கள் மனதில்....

பருவம் அறிந்து
சண்டையிட்டு சமாதனாத்துடன்
கட்டிபிடித்து கண்ணீருடன் அழுகை ....

இனியொரு பிறவி
நமக்கு உண்டோ இல்லையோ ?

மீண்டும் தங்கையாக நீயே வேண்டுமடி ....

நமக்குள் விட்டுகொடுத்து
செல்லும் குணத்தில் என்னை
வென்றவள்....

அவள் சிரிக்கும் பொழுது
உன் கன்னங்களில் விழும்
குழியின் அழகை என்னென்று சொல்ல....

கோபத்தில் கூட அக்கா
என்ற அழைப்பை தவற
வாடி போடி என்று சண்டையிட்டதில்லை ....

மருமகளாக இருவரும்
மாமியார் வீடு சென்றாலும்
நம் இரத்தப்பந்தம்
மாறபோவதில்லை .....

நம் தாய்மடி தந்த
பாசம் மாறுவதில்லை ....

நம் தந்தைதோள் தந்த
நேசம் மாறுவதில்லை....

நம் இருவரும் என்றுமே
கைக்கோர்த்த மழலைகளே ....

என்றுமே வேண்டுமடி
உன் பாசமும் நேசமும்
கோபம் கொண்ட குணமும் ....

(என் அன்புத்தங்கைக்கு சமர்ப்பணம் )

எழுதியவர் : சகி (28-Mar-15, 4:34 pm)
பார்வை : 106

மேலே