வென்றிடு

வென்றிடு..!
27 / 05 / 2024
வான் வீதியில்
பஞ்சு மேகங்கள்
எண்ணம் போலவே
போடும் கோலங்கள்
கொஞ்ச நேரம்தான்
கோலம் மாறுமே
கலைந்தே மேகங்கள்
வானில் கரையுமே……..

நீரோடையில்
நீர்த்திவலைகள்
தோன்றும் போதிலே
பல வண்ணங்கள் நம்
மனதை மயக்குமே
கண் மூடித் திறப்பதற்குள்
பட்டென உடைந்து
மறைந்து போகுமே

வாழ்வும் அதுபோல்
கைசொடுக்கும் நேரம்தான்
அதற்குள் நம்
எண்ணங்கள் படி
பல வண்ணங்கள்
காட்டி உயரம் தொடணும்
உயரப் பறந்து
மறைந்தே போகணும்.

ஒவ்வொரு நாளும்
உனதே - அதில்
ஒவ்வொரு நொடியும்
உனதே
கருத்தில் கொண்டு
காரியம் செய்திடு
வீரியத்தை செயலில் காட்டிடு
தடைகள் உடைத்தே
தரணியை வென்றிடு..!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (27-May-24, 7:07 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : venridu
பார்வை : 41

மேலே