நேரு மாமாவுக்கு ஒரு கவிதை மலர்வளையம்

#நேரு மாமாவின்
#நினைவு நாளுக்கு
#ஒரு "கவிதை மலர்வளையம்....!"


படைப்பு : கவிதை ரசிகன்
#குமரேசன்

'ராமர்' கூட
நாட்டைக் காப்பாற்ற
'14 ஆண்டுகள்' தான்
வனவாசம் சென்றார்...
'நீங்களோ !'
நாட்டை க் காப்பாற்ற
'16 ஆண்டுகள்
சிறைவாசம்' சென்றீர்கள் ...

இந்தியா
சுதந்திரம் பெற்ற பிறகு 'முதன்முதலாக
தேசியக்கொடியை
ஏற்றும் உரிமையை'
பாரதமாதா
உங்களுக்தான் கொடுத்தாள்... இதுவரை
அவளுக்காக
நீங்கள் கஷ்டப்பட்டதற்காக
மட்டுமல்ல
இனியும்
கஷ்டப்படுவீர்கள் என்பதற்காக....

பாரதமாதா ! உங்களை
'முதல் பிரதமராக'
நாற்காலியில் அமர வைத்து
அழகு பார்த்தாள்....
நாட்டு மக்களை
நீங்கள் 'இதயத்தில் வைத்து'
அழகு பார்ப்பீர் என்று....!

'குழந்தைகள்' தான்
எல்லோருடைய மனதையும் 'திருடுவார்கள்...'
நீங்கள் தான்
'அந்தக் குழந்தைகளின்
மனதையே திருடி' விட்டீர்....!

மாணிக்கம்
நஞ்சுள்ள பாம்பின் வயிற்றில்
உருவாகி வருமென்பார்கள்...
நீங்கள் எப்படி
பாரதமாதா வயிற்றில் உருவாகி
இந்தியாவின் மடியில்
"மாணிக்கமாக" பிறந்தீர் ?

ஒவ்வொருவரும்
ஒருவருக்கு
ஒரு உறவு முறை தான்
ஆக முடியும்...
நீங்கள் எப்படி
எல்லோருக்கும்
'மாமா 'வாகிப்போனீர்கள்....?
ஓ.....!
'தாயோடு பிறந்த புதல்வனை '
'ஒரு வயிற்றுப் பிள்ளைகள்
மாமா' என்று தானே
அழைப்பார்கள்.....!!!

காதலிப்பவருக்கு
ரோஜா பிடிக்கும்
நீங்கள் தான்
ரோஜாவையே காதலித்தீர் !

ரோஜாவை
பிடித்தவர்கள் எல்லாம்
'கூந்தலில்' தான் சூடினார்கள்
நீங்கள் தான்
'இதயத்திலேயே!' சூடினீர்.....

'ஐந்தாண்டு திட்ட த்தால்'
நாட்டை
'முன்னேற்ற' நினைத்தீர் !
இன்றைய அரசியல்வாதிகளோ!
'ஐந்தாண்டு திட்டத்தால்'
நாட்டையே
'பின்னேற்றி விட்டார்கள்..!'.

"பஞ்சசீலக்" கொள்கைகளைக்
கொண்டு வந்து
நாட்டை பாதுகாக்க
நினைத்தீர்கள் ......
இவர்களோ
"லஞ்சசீலக" கொள்கைகளைக்
கொண்டு வந்து நாட்டையே
பாதி பதிக்கி விடடார்கள்....!!!

"அணிசேராக்" கொள்கைகளைக் கொண்டு வந்து
'நாட்டை வளமாக்க' நினைத்தீர்!
இன்றைய அரசியல்வாதிகளோ!
'அணி சேர்ந்தே
நாட்டை வறுமை'யாக்கி விட்டார்கள்...

நீங்கள் "ரோஜாவை"
"இதயத்தில்" வைத்தது போல்
எங்கள் இதயத்தில்
உங்களை
"ராஜாவாக"
வைத்திருக்கிறோம்....!

உங்கள் புகழ் வாழ்க !!!
உங்கள் பெருமை வளர்க

♥ கவிதை ரசிகன்♥

எழுதியவர் : கவிதை ரசிகன் (27-May-24, 5:49 pm)
பார்வை : 13

மேலே