காணாமல் போன குழந்தைகள் தினம் பற்றிய கவிதை

*காணாமல் போன குழந்தைகள் தினம்* பற்றி *ஒரு கண்ணீர் கவிதை.....!!!*





😭😭😭😭😭😭😭😭😭😭😭

*காணாமல் போனா*
*குழந்தைகள் தினம்*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

😭😭😭😭😭😭😭😭😭😭😭

பணம்
காணாமல் போனால்
எடுத்தவருக்குப் பயன்படுமே....!
ஆடு மாடு
காணாமல் போனால்
பிடித்தவருக்குப் பயன்படுமே..! குழந்தைகள்
காணாமல் போனால்
"பிள்ளை மனம்
படாதபாடுபடுமே..!"

காணாமல் போன குழந்தைகள்
பெற்றோர்களைக் காண
ஏங்கித் தவிக்கும் நாட்கள் தான் எத்தனை எத்தனையோ ....!

காணாமல் போன குழந்தைகள்
உணவைக் காணாமல்
பசியால் கதறி அழும்
நாட்கள் தான்
எத்தனை எத்தனையோ...!

ஐயோ...கடவுளே !
இவர்கள் தாகத்தை
கண்ணீரில்
தணிக்கும் நாட்கள் தான்
எத்தனை எத்தனையோ...!

நல்லவர் கையில்
சிக்கியிருந்தால் ஆயிற்று !
தியவர் கையில்
சிக்கியிருந்தால்
ஐயோ ! என்னாயிற்றோ...?
ஒன்றும் தெரியலையே.?
உள்ளம் தான் தாங்களையே..?

குழந்தை காப்பகத்தில்
வளர்கிறதோ - இல்லை
குப்பை பொறுக்கி வாழ்கிறதோ..?
பள்ளிக்கு அனுப்பி
வைத்தார்களோ...? - இல்லை
பிச்சையெடுக்க
அடித்து அனுப்பினார்களோ..?
என்ன செய்வார்களோ ?
எப்படித்தான் வளர்வார்களோ ?

உடம்புக்குச் சரியில்லையென்றால்
உடனிருந்து பார்ப்பவர் யாரோ ?
பெற்றோர் ஏக்கம் தாளாமல்
தேம்பி அழுகையிலே
தேற்றுபவர் தான் யாரோ...?

உறுப்பு எடுப்பவர்களிடம் சிக்கி
நீ உயிரிழந்து போனாயோ ?
குழந்தை விற்பவரிடம் சிக்கி
வேறு நாடு சேர்ந்தாயோ.?
என்ன ஆனாயோ ?
எங்கு இருக்கிறாயயோ..?

கடவுளே ! நீ இருப்பது
உண்மை என்றால்
இவர்களை
எப்படியாவது காப்பாற்றி விடு...!
கடைசிக் காலத்திலாவது
பெற்றோர்களோடு சேர்த்து விடு...!

குழந்தையை வெளியில்
கூட்டிச் செல்லும் போது
கவனமாகப் பார்த்திருந்தால்
கையோடு கைக்கோர்த்திருந்தால்
குழந்தைகள்
காணாமல் போயிருக்குமா ...?
இந்த தினம் தான்
கருமம் வந்திருக்குமா...?

இனியாவது
மம்மி டாடி
சொல்லிக் கொடுப்பதோடு
உங்கள் போன் எண்களையும்
சொல்லிக் கொடுங்கள்....!

காணாமல் போனக் குழந்தை
உங்கள்
கையில் கிடைத்தால்
அருகில் உள்ள
ஆதார் ஆபீஸ்
அழைத்துச் சென்று
கைவிரல்
வைக்கச் சொல்லுங்கள்
காணாமல் போன
பெற்றோர்களை
கண்டுபிடித்து விடலாம்....

இந்த தினத்திற்கு
'வாழ்த்து ' சொல்ல முடியாது
'சாபம்' சொல்லியோ
முடிக்கிறேன்....!
அடுத்த ஆண்டுக்குள்
இந்த தினம்
'அழிந்துபோக ' வேண்டுமென்று !

*கவிதை ரசிகன்*

😭😭😭😭😭😭😭😭😭😭😭

எழுதியவர் : கவிதை ரசிகன் (25-May-24, 7:22 pm)
பார்வை : 21

மேலே