என்றும் மாறாதது

என்றும் மாறாதது .
24 / 05 / 2024

உன்னால் முடிந்ததை
உன் கையால்
நீ செய்தால்
அவன் கையால்
செய்வதை நிறைவாய்
அவன் செய்வான்.
எடைபோட்டு நீ செய்தால்
எடைபோட்டு அவனும் செய்வான்.
ஒவ்வொரு செயலுக்கும் சமமான
எதிர்வினை உண்டல்லவா?
இறையோ இயற்கையோ
விதி ஒன்றுதான்.
என்றும் மாறாதது .

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (24-May-24, 5:20 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 74

மேலே