தல தோனிக்கு பாராட்டுக் கவிதை

*தல தோனி* க்கு ஒரு பாராட்டு கவிதை எழுதி இருக்கிறேன் படித்து மகிழுங்கள் *நண்பர்களே!*




🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

*தல தோனிக்கு*
*ஒரு கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

தோனி
இந்தியா கிரிக்கெட் அணியை
உலகரங்கில்
உயர்த்திய ஏணி... !

இவன்
ஸ்டெம்புக்கு
பின்னால் நின்றால்
'விக்கெட்' விழும்....
ஸ்டெம்புக்கு
முன்னால் நின்றால்
பந்து 'சிக்ஸர்ல' விமும்

உலகக்கோப்பைப் போர்க்களத்தில்
உலக நாடுகளோடு போராடி
உலகக்கோப்பையை
மீட்டு வந்த மாவீரன் !
மனம் தளராத மறவன் !

கடைசி ஓவரை
எதிர்கொள்வது
இவன் என்றால்
'பந்துக்கும் பயம் பிறக்கும்'
எதிர் அணியினருக்கும்
'முகம் வேர்க்கும்.....!'

இவன்
களத்தில் இறங்கினால்
'கட்டுப்படுத்துவது'
அவ்வளவு எளிதல்ல...
ஏனென்றால் ?
'கொம்பில்லாதக்
காளை' ஆயிற்றே....!

தோல்வி
இவனிடம்
தோற்றுப் போனது...
வெற்றி
இவனிடம்
சலித்துப் போனது...

பேட்டை
கையில் எடுத்தால்
வேட்டைக்குப்
புறப்பட்ட 'சிங்கம்' தான்...
ஆம்...!
இவனுக்கும்
' பிடாரி முடி ' இருக்கிறது...!

இறங்கி அடித்தால்
அரங்கமே அதிரும் !
ஆடுகளமே கதறும் !

எதிரணியின் பந்து
ஸ்டெம்புக்கு
'முன்னாடி நிற்பவனை
போல்டாக்கலாம்... !'
ஆனால்
ஸ்டெம்புக்கு பின்னாடி
நிற்கும் இவனை
போல்டாக்கவே !' முடியாது..

அவுட்டா இல்லையா என்று
அம்பையார்கள் கூட
'வீடியோவைப் பார்த்து தான்
முடிவு செய்வார்கள்...'
இவன்
'விழியாலே பார்த்து
முடிவு செய்து விடுவான்...!'

இவன் பீல்டிங்கை
செட் பண்ணினால்
அடுத்தப் பந்தில்
விக்கெட்
விழுகிறது என்றே அர்த்தம்...!
விளையாடுவதற்கு வந்தால்
அடங்க
ஐந்து நிமிடமாகும் சப்தம்...!

இவன் ரன் எடுப்பதில்
மின்னல் வேகம் தோற்கும்..!
விக்கெட்டை வீழ்த்துவதில்
ஒளியின் வேகமே தோற்கும்...!

கேப்டன் பதவியால்
இவன்
'பெருமை அடையவில்லை...'
இவனால்
'கேப்டன் பதவி தான்
பெருமை அடைந்தது...!'

'நண்பர்களின்'
வாயினால் மட்டுமல்ல
'எதிரியின்' வாயினாலும்
பாராட்டுப் பெற்றவன் இவன் !

விளையாடியதால்
"பணத்தை"ச் சேர்த்தார்கள்......
இவன்தான்
"பாசத்தையும்" சேர்த்தான்...!

'கிரிக்கெட்' இருக்கும் வரை
ரசிகர்களின் 'மனதில்'
இவனுக்கு
' கட்அவுட் ' இருக்கும்....!

பாராட்டுகள் பல !
வாழ்க தல !


*கவிதை ரசிகன்*

🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

எழுதியவர் : கவிதை ரசிகன் (23-May-24, 7:17 pm)
பார்வை : 23

மேலே