வளம்பெறும்
வளம்பெறும்
23 / 05 / 2024
சுடுபட சுடுபட
தங்கம் மின்னும்
அறுபட அறுபட
வைரம் ஜொலிக்கும்
அரைபட அரைபட
சந்தானம் மணக்கும்
வெட்டுப்பட வெட்டுப்பட
வாழை துளிர்க்கும்
குட்டுப்பட குட்டுப்பட
அறிவு வளரும்
வதைபட வதைபட
வாழ்க்கை வளம்பெறும்