என் உடல் என் வீடு
என் உடல் என் வீடு.
இளைஞன் (இளமை) என் வீட்டில் வாழ்ந்த காலம் அது
என் மனம் அடிக்கடி சொல்லும்
என்னால் முடியாதது எதுவும் இல்லை என்று.
இப்போது!
அந்த இளைஞனுக்கு
என் வீடு பிடிக்கவில்லை
என்னைத் தனியாக விட்டுவிட்டு - அவன்
வெளியே சென்று விடுவான்.
என் மனைவி
என் பிள்ளைகள்
முகத்தில் கவலை
வந்து குடி இருக்கும்
சில நாட் கழித்து அந்த இளைஞன்
என் வீட்டிற்குத் திரும்பிடுவான்.
என் மனைவி
என் பிள்ளைகள்
முகத்தில் மகிழ்ச்சி மலர்ந் இருக்கும்.
"என்னால் முடியாதது ஒன்றுமில்லை"
இந்த சொற்றொடர்
இப்போதெல்லாம் என் மனதில் ஓடுவதில்லை.
சண்டியூர் பாலன்.